கிராபிக்ஸ் காட்சிகளால் தாமதமாகும் உத்தம வில்லன்

By ஐஏஎன்எஸ்

ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருந்த 'உத்தம வில்லன்' திரைப்படம் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவடையாததால் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, இயக்குநர் கே.விஸ்வநாத், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று முதலில் தகவல்கள் வெளியாகின.

"தோராயமாக 25 காட்சிகளுக்கு கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடைய வேண்டும். மார்ச் 27ம் தேதி இக்காட்சிகள் முடிந்திருக்க வேண்டியது. ஆனால், பல்வேறு காரணங்களால் முடிவடையமால் இருக்கிறது. ஆகவே, ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளியாகாது. ஏப்ரல் 24 அல்லது மே 1ம் தேதி வெளியாகும்" என்று படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

கமல்ஹாசன் படங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைத்து வரும் மதுசூதனன் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை முடிக்க தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

மேலும் "அவசர அவசரமாக வேலைகளை முடிக்க வேண்டாம் என கமல்ஹாசன் மதுசூதனனை கேட்டுக் கொண்டுள்ளார். இரண்டு வாரங்கள் தாமதமானாலும் பரவாயில்லை. ஆனால், கிராபிக்ஸ் காட்சிகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது. நன்றாக இருக்க வேண்டும் என்றே கமல் விரும்புகிறார்” என்றும் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

மேலும்