மீண்டும் ட்விட்டர் தளத்தில் இணைந்தார் யுவன்

ட்விட்டர் தளத்தில் இருந்து விலகியிருந்த யுவன் சங்கர் ராஜா, தற்போது மீண்டும் ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'மாஸ்' படத்துக்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மே 1ம் தேதி இப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சில காலங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை தழுவினார் யுவன். அப்போது ஏற்பட்ட சர்ச்சையில் ட்விட்டர் தளத்தில் இருந்து விலகினார்.

"இன்னும் சில நாட்களில் ட்விட்டர் தளத்தில் இணைவேன்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார் யுவன்.

தற்போது @thisisysr என்ற கணக்கில் மீண்டும் ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கிறார். வெங்கட்பிரபு இத்தகவலை உறுதி செய்திருக்கிறார். மீண்டும் ட்விட்டர் தளத்தில் இணைந்திருப்பது அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE