அறுந்த ரீலு 2: தண்ணில கண்டம் ரஜினிகாந்த்

'முத்து' படத்தில் பாறையில் இருந்து ரஜினி, மீனா இருவரும் உருண்டு தண்ணீரில் வந்து விழுவார்கள். அதற்குப் பிறகு ரஜினி தண்ணீரில் இறங்குவது மாதிரியான காட்சி எந்தப் படத்திலும் கிடையாது என்கிறார்கள், அவரது நெருங்கிய வட்டாரத்தில்.

ஏன்?

இந்தக் கேள்விக்கு பதிலாக கிடைத்தது ஒரு சம்பவம்.

'படையப்பா' படத்தில் சவுந்தர்யாவிடம் ரஜினி தனது கையில் இருக்கும் மவுத் ஆர்கனை வாசித்து தனது காதலை வெளிப்படுத்துவது போன்று காட்சிகள் இருக்கும். அதில் முக்கியமான காட்சி குளத்துக் கரையில் இருக்கும்படியாக திட்டமிட்டப்பட்டிருந்தது.

முதலில் அக்காட்சியை ரஜினி, சவுந்தர்யா இருவருமே தண்ணீருக்குள் இருப்பது போன்ற வடிவமைப்பில் எழுதி முடித்துவிட்டார்கள். அக்காட்சியை ரஜினியிடம் விளக்கினார்கள்.

உடனே இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரை அழைத்த ரஜினி, "ரவிகுமார் சார்... நான் தண்ணியில் இறங்கி நடித்து எல்லாம் நாளாகி விட்டது. எனக்கு தண்ணில கண்டம். அதனால் இக்காட்சியை மாற்றி எடுத்துவிடுங்கள். இல்லையென்றால் இக்காட்சி வேண்டாமே" என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

அடுத்த அரைமணி நேரத்தில் காட்சியை அப்படியே மாற்றி சவுந்தர்யா மட்டும் தண்ணீருக்குள் இருப்பது போலவும், ரஜினி தனது நண்பர்களுடம் குளத்து கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பது போலவும் காட்சியை மாற்ற, அதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்து அக்காட்சி படமாக்கப்பட்டது.

அறுந்த ரீலு 1: >'ரயிலை நிறுத்திய விஜயகாந்த்'

| கோடம்பாக்கத்தில் உலவும் 'வரலாற்றுக் கதை'களின் சுவாரசியங்களைச் சொல்லும் தொடர் இது. |

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE