இதுக்கு மேல புண்ணியம் பண்றதுக்கில்லை! - நகைக் கடை அதிபர் பற்றி ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

“இதுக்கு மேல புண்ணியம் பண்றதுக்கில்லை” என்று கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன அதிபர் பற்றி ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறு வனம், பிரம்மாண்டமான புதிய நகைக் கடையை சென்னை தியாக ராய நகரில் ஏப்ரல் 17-ம் தேதி திறக்கிறது. இதில் கலந்துகொள் வதற்கான அழைப்பிதழை கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.எஸ்.கல்யாணராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வழங்கினர்.

45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது கல்யாண் ஜுவல் லர்ஸ் போன்ற நிறுவனங்கள் சென்னையில் விரிவுபடுத்தப்படுவது குறித்து தனது மகிழ்ச்சியை ரஜினி காந்த் வெளிப்படுத்தினார். மேலும் ‘நம்பிக்கை, அதானே எல்லாம்’ என்ற வாசகத்தின் அடிப்படையில் அமிதாப் பச்சன், பிரபு ஆகியோரை வைத்து எடுக்கப்பட்டுள்ள கல்யாண் ஜுவல்லர்ஸின் விளம்பரங்களையும் வெகுவாக பாராட்டினார்.

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறு வனம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருப்பதையும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பதையும் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டினார். இதுபற்றி குறிப்பிட்ட அவர், “இதுக்கு மேல புண்ணியம் பண்றதுக்கில்லை” என்றார்.

ரஜினிகாந்தின் படங்களை தானும் தங்கள் குடும்பத்தினரும் ரசித்துப் பார்த்து வருவதாகவும், அவரது கொள்கைகள் தங்களை மிகவும் கவர்ந்திருப்பதாகவும் கல் யாணராமன் கூறினார். அதற்கு பதி லளித்த ரஜினிகாந்த், “நம்பிக்கை யான பிஸினஸ் பண்ணா, சென்னை ஆளுங்க உங்களைத் தேடி வருவாங்க” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE