ஜூனில் வெளியாகிறது கமலின் பாபநாசம்

'உத்தம வில்லன்' படத்தைத் தொடர்ந்து 'பாபநாசம்' படத்தை ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது.

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'த்ரிஷ்யம்'. விமர்சகர்கள் மத்தியிலும், வசூலிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் பெற்றது.

தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக்காகி விட்டது. தமிழில் கமல், கெளதமி, சார்லி, கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கிறார். 'பாபநாசம்' என பெயரிடப்பட்ட இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. மே 1ம் தேதி 'உத்தம வில்லன்' வெளியாக இருப்பதால், ஜூனில் 'உத்தம வில்லன்' படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

மே மாதத்தில் 'உத்தம வில்லன்', ஜூனில் 'பாபநாசம்' அதனைத் தொடர்ந்து 'விஸ்வரூபம் 2' என கமலின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE