தெலுங்கு படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு திருமண முடிவு காரணமில்லை: அமலாபால் விளக்கம்

By செய்திப்பிரிவு

‘வஸ்தா நீ வேனுகா’ என்ற தெலுங்கு படத்தில் இருந்து நடிகை அமலாபால் சமீபத்தில் நீக்கப்பட் டார். இயக்குநர் விஜய்யுடன் அவரது திருமணம் நிச்சயமானதை தொடர்ந்து அமலா பாலை படத்திலிருந்து நீக்கியதாக செய்தி வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ள நடிகை அமலா பால், இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘வஸ்தா நீ வேனுகா’ தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சில மாதங்கள் முன்பு என்னை அணுகியது. அந்த படத்தில் நடிக்க நான் 45 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி கொடுத்திருந்தேன். இதன் படப்பிடிப்பு மே மாதத்துக் குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் படப்பிடிப்பு பற்றி எந்த தகவலையும் கூறவில்லை. மேலும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தவிருப்பதாக கூறியவர்கள், விசாவிற்காக எனது பாஸ்போர்ட்டையோ எனது உதவியாளரின் பாஸ்போர்ட்டையோ கோரவில்லை.

இந்நிலையில் இயக்குநர் விஜய்க்கும் எனக்கும் திருமணம் நிச்சயமாகியிருப்பதால் என்னை அந்த தெலுங்கு படத்திலிருந்து நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனக்கும் விஜய்க்கும் ஜூன் மாதம் தான் திருமணம் நடக்கிறது.ஆனால் நானோ மே மாதம் வரைதான் கால்ஷீட் கொடுத்திருந்தேன்.

அப்படி இருக்கையில் விஜயுடனான திருமணம் படத்தை எந்த வகையில் பாதிக்கும்? எனவே வேறேதோ காரணத்திற்காகத்தான் அவர்கள் என்னை நீக்கியுள்ளார்கள். இதை நான் யாரையும் குறை கூறுவதற்காக கூறவில்லை.உண்மையை வெளியில் சொல்லத்தான் இந்த விளக்க உரையை வெளியிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்