கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் சாதிய ரீதியாக சில சர்ச்சைகள் உள்ளதால் இப்படத்தை மறுதணிக்கை செய்யவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
'குட்டிப்புலி' இயக்குநர் முத்தையாவின் இரண்டாவது படம் 'கொம்பன்'. கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள இப்படத்தில் ராஜ்கிரண், கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
சமீபத்தில் 'கொம்பன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ட்ரெய்லருக்கு இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மார்ச் 27-ம் தேதி 'கொம்பன்' திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'கொம்பன்' படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.
'' 'கொம்பன்' திரைப்படத்தில் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு வன்முறையான வசனங்கள் இருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். அந்தப் படம் ஒரு சிலரை உயர்த்தியும், பல்வேறு சிறுபான்மையினரை தாழ்த்தியும் கொடுஞ்சொற்களால் வசனங்கள் இருக்கின்றன.
இந்த படத்துக்கு திரைப்பட தணிக்கை குழு அனுமதி அளித்து இருந்தால் அது தவறானது. அந்தப் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக ஆய்வு செய்து, மறு தணிக்கை செய்ய வேண்டும்'' என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago