மணிரத்னம் இயக்கும் இந்திப் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'கடல்' படத்தைத் தொடர்ந்து, துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் 'ஓகே கண்மணி' என்ற படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்தியில் 'ராவணன்' தோல்வியைத் தொடர்ந்து மணிரத்னம் எந்தப் படத்தையும் இந்தியில் இயக்கவில்லை.
'கடல்' தமிழில் மட்டுமே வெளியானது. இங்கும் சுமாரான வரவேற்பையே பெற்றது. தனுஷின் இரண்டாவது இந்திப் படமான 'ஷமிதாப்' 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெளியீட்டிற்கு முன்னரே ஷமிதாப் குறித்த எதிர்பார்ப்பு பாலிவுட்டில் அதிகமாகியுள்ளது.
தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கும் படத்திலும், அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இதற்கடுத்தே தனுஷ் மணிரத்னம் படத்தி இணைவார் எனத் தெரிகிறது.
பாலிவுட்டில் தனுஷிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாலேயே தனது அடுத்த இந்திப் படத்தில் தனுஷை நாயகனாக வைத்து இயக்க மணிரத்னம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தனுஷ், மணிரத்னம் என இரண்டு தமிழ் நட்சத்திரங்கள் இருப்பதால் நிச்சயம் இந்தப் படம் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago