கவுண்டமணி நடிக்கும் புதுப்படம்: மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடக்கம்

By மகராசன் மோகன்

சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மார்ச் 1-ல் தேதி தொடங்குகிறது.

‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தைப் பற்றி இயக்குநர் கணபதி பாலமுருகன் கூறும்போது, “ இந்தப் படத்தில் சினிமா படப்பிடிப்புக்கு கேரவானை வாடகைக்கு கொடுப்பவராக கவுண்டமணி நடிக்கிறார். அவருக்கு இதில் காதல் காட்சிகள் உள்ளன. தற்போதைய ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவராக இதில் கவுண்டமணி நடிக்கிறார். ஆதார் அட்டை முதல் ஒபாமா வரைக்கும் எல்லாவற்றைப் பற்றியும் அவர் கமென்ட் அடிப்பார். இப்படம் கவுண்டமணிக்கு வித்தியாசமான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அருணகிரி இசையமைக்கும் இப்படத்துக்கு கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்துக்கான நாயகியைத் தேடி வருகிறோம். இப்படத்தை மார்ச் மாதம் தொடங்கி, மே இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்