“2014-ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருந்தது? 2015-ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்” என்று நம் சினிமா பிரபலங்கள் சிலரிடம் கேட்டோம்.
விஜய் சேதுபதி:
2014-ம் ஆண்டு எனக்கு நிறைய அனுபவங் களைக் கொடுத்தது. 2015 எப்படியிருக்கும் என்ற ஜோதிடமெல்லாம் எனக்கு தெரியாது. எப்படி இருந்தாலும் எனக்கு சம்மதம்தான்.
விஷால்:
ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் 2014-ம் ஆண்டு எனக்கு நல்லவிதமாக அமைந்தது. 2015-ம் ஆண்டு எனக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கும். வரும் ஆண்டில் நிறைய நல்ல படங்களில் நடிப்பது மட்டுமன்றி தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறேன். திருட்டு வி.சி.டிக்கு எதிரான என் போராட்டம் இந்த ஆண்டிலும் தொடரும்.
சூரி:
2014 எனக்கு ரொம்ப சந்தோஷமான ஆண்டுண்ணே. ‘ஜில்லா’வில் சந்தோஷமாக ஆரம்பிச்சேன், முடியறப்போ ‘வெள்ளக்கார துரை’யோட சந்தோஷமா முடிக்கிறேன். என்னோட நீண்ட தூர பயணத்துக்கு அடித் தளம் போடுற ஆண்டா 2015 இருக்கும்னு நம்பறேன். ‘இது நம்ம ஆளு’, ‘அப்பாடக்கர்’, ‘ரஜினி முருகன்’, ‘மாப்பிள்ளை சிங்கம்’, ‘கத்துக்குட்டி’, சுசீந்திரன் அண்ணன் படம்னு 2015-ல் எனக்கு நிறைய பெரிய படங்கள் வருது. இந்த வருஷம் இன்னும் நிறைய கத்துக்கப் போறேன்.
பிரேம்ஜி
2014-ல் என் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகல. ஆனா 2015-ல ‘மாஸ்’, ‘மாங்கா’, ‘டக்கரு’ன்னு நிறைய படங்கள் ரிலீஸ் ஆகப்போகுது. அதோட நிறைய படங்கள்ல இசையமைக்கவும் போறேன்.
சிம்ஹா:
2014-ம் ஆண்டைப் பொறுத்தவரை ரொம்ப சந்தோஷமான வருஷம். ‘ஜிகர்தண்டா’வுக்கு கிடைத்த பாராட்டில் திக்குமுக்காடி போயிட்டேன். 2015 ரொம்ப பயமா இருக்கு. என்னிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். ‘பாம்பு சட்டை’, ‘உறுமீன்’, ‘இறைவி’ இப்படி நிறைய படங்கள் 2015-ல் வெளியாகி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யணுமேன்னு பயந்துட்டு இருக்கேன்.
அட்லீ:
2014-ல் என் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகல. என்னோட ‘ராஜா ராணி’ தெலுங்கில் 75 நாள் ஒடி நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. என்னுடைய குருநாதர் ஷங்கர் சார் கையால் விருது வாங்கியதும், என் திருமணமும் மறக்க முடியாத விஷயங்கள். 2015-ல் என்னுடைய அடுத்த படத்துக்கான படப்பிடிப்பை தொடங்குவதற்கான அனைத்து வேலைகளும் போயிட்டு இருக்கு.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago