'என்னை அறிந்தால்' படத்தின் டீஸருக்கு யூடியூபில் குவிந்துள்ள 'லைக்'குகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, நடிகர் அஜித்தின் ரசிகர்கள் ட்விட்டரில் தொடர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் சோனி நிறுவனத்தால் யூடியூப் இணையத்தில் கடந்த 2-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
டீஸர் வெளியான 48 மணி நேரத்திற்குள்ளாகவே 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டது, இந்தப் படத்துகான முதல் பெரிய வரவேற்பை தேடித் தந்தது. தென் இந்தியாவில் மிகப் பெரிய ஹிட்டாக 'என்னை அறிந்தால்' படத்தின் டீஸர் டிசம்பர் 6-ஆம் தேதி திகழ்ந்து யூடியூபில் டிரெண்ட் ஆனது.
இதனைத் தொடர்ந்து, இந்த டீஸருக்கான விருப்பங்கள் யூடியூப் வலைதளத்தில் மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி, ‘என்னை அறிந்தால்’ டீஸரை 29 லட்சத்துக்கு மேற்பட்டோர் கண்டுள்ளனர். அத்துடன், 68,000 லைக்குகளைக் கடந்துள்ளது. இந்த டீசரை விரும்பவில்லை என சுமார் 4 ஆயிரம் பேர் டிஸ்லைக் பட்டனை க்ளிக்கியிருக்கிறார்கள்.
யூடியூபில் 'என்னை அறிந்தால்' டீஸருக்கு கிடைத்துள்ள இந்த மகத்தான வரவேற்பை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக, இந்தியாவில் மிகுதியாக விரும்பப்பட்ட படத்தின் டீஸர் எனப் பொருள்படும் விதமாக #MostLikedIndianTeaserYennaiArindhaal என்ற ஹேஷ்டேகை உருவாக்கினர். இந்த ஹேஷ்டேகும் தொடர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிப்பது கவனிக்கத்தக்கது.
Loading...
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago