இயக்குநர் கே.பாலசந்தரின் மறைவுச் செய்தியைக் கேட்டு உடனடியாக சென்னைப் புறப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இயக்குநர் கே.பாலசந்தர் நேற்று மாலை 7 மணியளில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு உடனடியாக வெளிநாட்டில் இருந்த கமலுக்கு தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்து உடனடியாக கமல் சென்னை திரும்புவதற்கு, விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
கே.பாலசந்தர் உறவினர்கள் தரப்பில் இருந்து 25-ஆம் தேதி காலைதான் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டதால், கமலும் புறப்படத் தயாரானார்.
இதனால், அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர், அங்கிருந்து சென்னை என விமான டிக்கெட் பதிவு செய்யப்பட்டது. அதன்படி நவம்பர் 24-ம் தேதி இரவு 11:30 மணிக்கு சென்னை வந்தடைந்து, கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளலாம் என்று திட்டமிட்டார் கமல்.
திடீரென்று கே.பாலசந்தரின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து இன்று (புதன்கிழமை) 2 மணிக்கே இறுதி ஊர்வலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து கிளம்பினாலும் இறுதி ஊர்வலம் தொடங்கும் நேரத்திற்குள் வந்து பார்க்க முடியாது என்பதால், தனது விமான டிக்கெட் அனைத்து ரத்து செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார் நடிகர் கமல்ஹாசன்.
தனது பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, சென்னை திரும்பியவுடன் பாலசந்தரின் குடும்பத்தினரை சந்திக்க இருக்கிறார் கமல்.
கே.பாலசந்தர் இறுதியாக நடித்திருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான பணிகளை தான் வெளிநாட்டில் இருந்து கவனித்து வந்தார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago