அரிசிமிட்டாய்: திகில் காமெடி

பொங்கலுக்கு ‘விசாரணை’

இயக்குநர் வெற்றிமாறன், தினேஷ் கூட்டணியில் உருவான ‘விசாரணை’ படத்தின் டிரெய்லரை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் எடிட்டிங், பின்னணி இசைக்கோர்ப்பு, டிரெய்லர் கட் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ‘உள்குத்து’ படத்துக்காகவும், வெற்றிமாறன் உதவியாளர் ராஜ்குமார் இயக்கவிருக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ ஆகிய படங்களின் படப்பிடிப்புக்கும் தயாராகி வருகிறார் தினேஷ்.

கர்நாடகா டு கேரளா

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பை சென்னையில் 45 நாட்கள் முடித்துள்ளனர். தற்போது மைசூர் லலிதா பேலஸில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார் சிம்புதேவன். ரஜினியின் ‘முத்து’ பட பிளாஷ்பேக் காட்சியில் வரும் மைசூர் மாளிகைதான் அது. மொத்தமாக 150 நாட்கள் படமாக்கத் திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தில் மலை சார்ந்த பகுதிகளின் படப்பிடிப்புக்காக கேரளாவில் பசுமை சூழல் நிறைந்த பகுதியைத் தேர்வு செய்வதில் படத்தின் ஒரு குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

உதவி இயக்குநரின் கதை

சாமி இயக்கத்தில் தயாராகிவரும் ‘கங்காரு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் படத்தின் இயக்குநர் சாமி பேசும்போது, ‘‘4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரவிருக்கும் படம் இது. ஒரு படம் வெற்றி பெற்றால் எல்லோரும் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். என் உதவி இயக்குநர் சாய்பிரசாத் சொன்ன கதைதான் ‘கங்காரு’. நினைவில் நிற்கிற படமாக இருக்கும். என் முந்தைய படங்கள் வேறுமாதிரி இருந்ததற்கு நான் மட்டுமே காரணமல்ல. சினிமாவில் பலர் அறியாத விஷயம், ஒரு படம் எந்தமாதிரி வரும் என்பதை தனிநபர் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எல்லோரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது’’ என்றார்.

இறுதிகட்டத்தில்..

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் ‘சகாப்தம்’ படத்தில் ஒரு பாடல் தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளன. ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த இந்தப் படத்தில் கிராமப் பின்னணி காட்சிகளில் நாயகி நேகாவும், நகரப் பின்னணி காட்சிகளில் நாயகி சுப்ரா ஐயப்பாவும் நடித்திருக்கிறார்கள். பொங்கலுக்கு இசை வெளியீடு, ஜனவரி இறுதியில் படம் ரிலீஸ்.

திகில் காமெடி

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தை அடுத்து ‘போடா! ஆண்டவனே என் பக்கம்’ படத்துக்கான முழு கதை வேலைகளையும் முடித்திருக்கிறார் இயக்குநர் கண்ணன். பிப்ரவரி இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் வரும் ‘அடியே காந்தா’ என்ற வரி மிகவும் பிரபலமானது. அதை தலைப்பாக வைத்து மற்றொரு படத்தின் கதையையும் தயார் செய்திருக்கிறார். ‘‘அடியே காந்தா படத்தின் கதையை ஒரு ஆண்டுக்கும் மேலாக தயார் செய்துவருகிறோம். முழுக்க திகில் காமெடி கதை. ‘போடா! ஆண்டவனே என் பக்கம்’ படத்தை முடித்ததும் இந்தப் படத்தின் வேலைகளை 2015-ல் தொடங்கி முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்’’ என்கிறார் கண்ணன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்