லிங்கா வசூல் ரீதியில் இழப்பா? - வேந்தர் மூவிஸ் நிறுவனத்திடம் விசாரித்த ரஜினி

By செய்திப்பிரிவு

'லிங்கா' வசூல் ரீதியில் இழப்பானதா உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வேந்தர் மூவிஸ் நிறுவனத்திடம் விசாரித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

'லிங்கா' படத்தின் வசூல் நிலவரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. திருச்சி மற்றும் தஞ்சாவூர் விநியோகஸ்தரான சிங்காரவேலன், "'லிங்கா' படத்தை வாங்கி வெளியிட்டதால் தனது பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது." என்று கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் ரஜினியிடம் ஏன் மனு அளிக்கவில்லை என்று கேட்ட போது, "அதுக்கு முன்னாடி, இந்த விஷயத்தை ரஜினியின் கவனத்திற்கு கொண்டு போகணும்னு நினைத்தோம். அதற்காக தான் நேரடியாக பேட்டி கொடுத்தேன். அது மாதிரியே ரஜினி சாரின் கவனத்திற்கு எங்க போராட்டம் போயிருக்கிறது." என்றார்.

இதனைத் தொடர்ந்து என்ன நடைபெற்றது என்று விசாரித்த போது, "'லிங்கா' படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷிடம் இருந்து ஈராஸ் நிறுவனத்திடம் தான் மொத்த உரிமையும் இருக்கிறது. அவர்களிடம் கோயம்புத்தூர் ஏரியா தவிர மற்ற தமிழ்நாட்டு ஏரியாக்கள் அனைத்தையும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது.

வேந்தர் மூவிஸ் நிறுவனம் பல்வேறு விநியோகஸ்தர்களிடம் ஏரியா வாரியாக பிரித்து அளித்தார்கள். சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் படம் நல்லபடியாக போய் கொண்டிருந்தாலும், பல இடங்களில் அதிகப்படியான தொகையால் நஷ்டம் ஏற்பட்டிருப்பது உண்மை தான்.

'லிங்கா' படத்தை என்ன விலைக் கொடுத்து வாங்கினீர்கள், யாரிடம் என்ன விலைக் கொடுத்து வாங்கினீர்கள் என்று முழு விவரத்தையும் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார் ரஜினி. எதற்காக கேட்டார் என்று தெரியவில்லை. ஆனால் படத்தின் பட்ஜெட் என்ன, எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார்கள் என ஒட்டுமொத்தமும் ரஜினி கையில் இருக்கிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்