அமெரிக்காவில் பிப்ரவரியில் இசை வெளியீடு: உத்தம வில்லன் அப்டேட்ஸ்

By செய்திப்பிரிவு

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், கே. பாலசந்தர், விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடிக்க, ரமேஷ் அரவிந்த் இயக்கி இருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ஜிப்ரான் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் கமல்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. படப்பிடிப்பு முடித்து இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், படம் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது படத்தின் FINAL MIX பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதனை மேற்பார்வையிட்டு கவனித்து வருகிறார் கமல்ஹாசன். அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு ஜனவரியில் இசை வெளியீட்டு விழாவை அமெரிக்காவிலே நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன், படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டு பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE