'அறம் 2' படம் உருவாக்கத்தில் குழப்பம் நீடித்து வருகிறது. முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க பல நாயகிகளின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
2017-ம் ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்'. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.
இதனைத் தொடர்ந்து 2-ம் பாகம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும், நயன்தாரா நடிக்க சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இந்தப் படத்துக்கு முன்பாக கோபி நயினார் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இதில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து 'அறம் 2' உருவாக்கத் திட்டமிட்டார் கோபி நயினார். இதனால் மீண்டும் 'அறம் 2' செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. தற்போது 'அறம் 2' படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக விசாரித்த போது, சமந்தாவிடம் 'அறம் 2' கதை சென்றுள்ளது. அவருக்குக் கதை மிகவும் பிடித்திருந்தாலும், பல படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக திரையுலகினர் தெரிவித்தார்கள். நயன்தாராவும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால், அவருக்குப் பதிலாக வேறொருவரை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.
இதனால் 'அறம் 2' படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பவர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
27 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago