நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் 'நா நா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘சலீம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நிர்மல் குமார். அடுத்ததாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷாவை வைத்து ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை இயக்கியுள்ளார். பைனான்ஸ் பிரச்சினையால் இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில், சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நிர்மல் குமார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு, பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சசிகுமார் உடன் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு 'நா நா' என்று பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
சசிகுமார் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'கென்னடி கிளப்' மற்றும் ‘நாடோடிகள் 2’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தப் படம் வெளிவரும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago