டிஜிட்டல் உரிமை விற்பனை: தயாரிப்பாளர்களுக்கு அபிராமி ராமநாதன் வேண்டுகோள்

By ஸ்கிரீனன்

டிஜிட்டல் உரிமை விற்பனை தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு திரையரங்குகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பெளவ் பெளவ்'. பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ப்ரதீப் இயக்கியுள்ளார். ஒரு சின்னப் பையனுக்கும் நாய்க்கும் இடையேயான நட்பைக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. லண்டன் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையரங்குகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், எடிட்டர் மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் அபிராமி ராமநாதன் பேசும் போது, “தேவர், ராம நாராயணன் சாருக்குப் பிறகு மிருகங்களை வைத்து படமெடுத்திருக்கிறீர்கள். இன்னும் நிறைய எடுக்க வேண்டும். 'ஆட்டுக்கார அலமேலு' படம் என் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் போது, தேவரிடம் 'ஏங்க ஆடு, யானையை வைச்சு எல்லாம் படம் எடுக்குறீங்க' என்று கேட்டேன். 'அவுத்துவிட்டா நடிக்குதுடா' என்று சிரித்தார்.

இந்த மேடையில் தயாரிப்பாளர்களுக்கு அனைத்து திரையரங்குகள் சார்பாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். படங்களின் டிஜிட்டல் உரிமையை 3 மாதங்கள் கழித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால் நாங்கள் அழிந்துவிடுவோம்.

நான் என் திரையரங்கை இடித்து மிகப்பிரம்மாண்டமாக கட்டப் போகிறேன். ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஒரு வாரத்தில் அமேசான், நெட் ஃபிளிக்ஸில் வரப்போகிறது. ஏன் திரையரங்கிற்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. திரையரங்கம் மனைவி மாதிரி. மற்றது எல்லாம் இரண்டாவது தான். ஏனென்றால் அள்ளிக் கொடுப்பது நாங்கள் தான்.

திரையரங்கில் வருவது போல் 10 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய் அள்ள முடியாது. டிஜிட்டலில் உங்களை ஏமாற்றி, மொட்டையடித்து ஒரு விலை கொடுத்து வாங்கிவிடுவார்கள். இதனால் திரையரங்குகள் பாதிப்படைகின்றன. ஆகையால் 3 மாதங்களுக்கு டிஜிட்டல் உரிமையைக் கொடுக்காதீர்கள். சிட்டியில் உள்ள திரையரங்குகள் இதனால் பாதிப்படைந்துள்ளன. விரைவில் அப்படியே கீழே இறங்கி ஒட்டுமொத்த திரையரங்குகளும் பாதிக்கக் கூடும்.

பிரம்மாண்ட திரைக்காகப் படம் பண்ணிவிட்டு, 42 இன்ச் திரையில் பார்க்க வேண்டும் என்று நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்” என்று பேசினார் அபிராமி ராமநாதன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்