பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் எனக்குப் பிடிக்காது: ஜனனி ஐயர்

By ஸ்கிரீனன்

பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் எனக்குப் பிடிக்காது என்று அதில் போட்டியாளராகப் பங்கேற்ற ஜனனி ஐயர் தெரிவித்துள்ளார்.

'அவன் இவன்', 'தெகிடி', 'அதே கண்கள்', 'பலூன்' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர் ஜனனி ஐயர். ஜூன் 28-ம் தேதி வெளியான 'தர்மபிரபு' படத்தில் முக்கியக் கதபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக சோபிக்கவில்லை என்றாலும், வசூல் ரீதியாக பி மற்றும் சி சென்டர்களில் நல்லபடியாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ’தர்மபிரபு’ படத்தை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார் ஜனனி ஐயர். அதில் 'பிக் பாஸில் தோன்றியது திருப்புமுனையாக அமைந்ததா?' என்ற கேள்விக்கு, ஜனனி ஐயர், “அது எனது பெயரை எல்லோர் வீட்டுக்கும் எடுத்துச் சென்றது.

சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சியில் படப்பிடிக்குச் சென்றிருந்த போது பலரும் நான் யார், எந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் என்றெல்லாம் கேட்டார்கள். சமீபத்தில் மீண்டும் அங்கு சென்ற போது கூட்டம் கூடி என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். பல படங்களால் முடியாததை பிக் பாஸ் செய்துவிட்டது.

சிறிய டவுன், கிராமங்களில் கூட என்னைப் பிரபலப்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகள் உண்மையில் எனக்குப் பிடித்தமானவை அல்ல. ஆனால், அது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு அனுபவம்” என்று தெரிவித்துள்ளார் ஜனனி ஐயர்.

பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராகப் பங்கேற்றவர் ஜனனி ஐயர் என்பது நினைவுக் கூரத்தக்கது

'பிக் பாஸ்' வீட்டுக்குள் போலீஸ்: கைதாவாரா வனிதா விஜயகுமார்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்