அஜித்தின் சிக்ஸ் பேக் உடலமைப்பு கிராபிக்ஸ் வடிவமைப்பு அல்ல என்று அப்படத்தின் இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் 'விவேகம்' படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இரண்டாம் கட்டமாக பல்கேரியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் பிரதான காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு.
காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பைத் தொடங்கவுள்ள படக்குழு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைப்பை இணையத்தில் வெளியிட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சிவா, "'விவேகம்' அனைத்து தரப்பு மக்களையும் கவரக்கூடிய வகையில் உருவாக்கப்படும் ஆக்ஷன் படமாக்கும். பெரும் பொருட்செலவில் உருவாவதால், படத்தின் திரைக்கதை மிகவும் நேரம் எடுத்து உருவாக்கியுள்ளேன்.
இப்படத்தில் அஜித்தின் இன்னொரு லுக்கையும் விரைவில் வெளியிடவுள்ளோம். டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு முன்பு வெளியாகும். பல்கேரியாவில் இன்னொரு கட்ட படப்பிடிப்பு உள்ளது. அதற்காக விரைவில் பயணிக்கவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
'விவேகம்' போஸ்டரில் அஜித்தின் 6 பேக் உடலமைப்பு கிராபிக்ஸ் என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். இதற்கு "அந்த உடலமைப்பு கிராபிக்ஸ் அல்ல. அந்த உடலமைப்புக்காக அஜித் சார் மிகவும் சிரத்தை எடுத்து உருவாக்கினார்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா.
விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை முடித்து, இறுதிகட்ட பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. ஜூனில் இப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago