ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய - மாநில அரசுகள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. மேலும், 30% நகராட்சி வரியும் செலுத்த வேண்டும் என்று கூறியதால், திரையரங்கு உரிமையாளர்கள் திங்கட்கிழமை முதல் அனைத்து காட்சிகளையும் ரத்து செய்துள்ளார்கள்.
ஜிஎஸ்டி வரி தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், "பிராந்திய மொழி சினிமாக்களை குறைந்த ஜிஎஸ்டி வரம்பில் வைக்கும்படி மத்திய அரசிடம் கூட்டாக ஒரு விண்ணப்பத்தை முன்வைத்துள்ளோம்.
தற்போது வசூலிக்கப்படும் கேளிக்கை வரியும் ஜிஎஸ்டியில் அடங்குமா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்துக்கான ஜிஎஸ்டி வேறா என்பதையும் தமிழக அரசே தெளிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி மற்றும் நகராட்சி வரி தொடர்பாக, தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இதில் திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியைக் குறைக்க முதல்வர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago