'Attarintiki Daredi' படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்கு பெரும் போட்டி நிலவி வருகிறது.
பவன் கல்யாண் - இயக்குனர் த்ரிவிக்ரம் இணைப்பில் வெளியாகியிருக்கும் 'Attarintiki Daredi' படத்தின் வசூல் முந்தைய படங்களின் வசூல் அனைத்தையும் முறியடிக்கும் என்று ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
' அத்தரின்டிகி தாரெதி ' என்றால், அத்தை வீட்டுக்கு வழி என்ன என்று பொருள்.
தன் தாத்தாவின் ஆசைப்படி, அவருடைய மகளை (அத்தையை ) தாத்தாவோடு சேர்த்து வைக்க, பேரன் மேற்கொள்ளும் பயணமே 'Attarintiki Daredi'. த்ரிவிக்ரமின் ஸ்டைலான மேக்கிங், பவன் கல்யாணின் நடிப்பு, கிளாமருக்கு சமந்தா, ப்ரணீதா, இசைக்கு ஸ்ரீதேவி பிரசாத் என படத்தில் அனைத்து அம்சங்களும் ஒன்றிணைந்திருப்பதால் படம் மெகா மெகா ஹிட்.
'Attarintiki Daredi' படம் முதல் நாள் வசூல் நிலவரம் : நிஷாம் - 3.29 கோடி, குண்டூர் - 1.41 கோடி, கிழக்கு கோதாவரி - 1.05 கோடி, மேற்கு கோதாவரி - 77 லட்சம், கிருஷ்ணா மாவட்டம் - 71 லட்சம்.
இந்தி படங்களுக்கு நிகராக செப் 27- முதல் செப் 29 வரை சுமார் 35 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 1.7 கோடி வசூல் செய்திருக்கிறது. வசூலை வாரிக்குவித்து வருவதால், படக்குழு சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.
வெற்றிப் படம் என்பதால், படத்திற்கு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு இடையே ரீமேக் உரிமைக்கு பெரும் போட்டி நிலவி வருகிறது. விரைவில் 'Attarintiki Daredi' தமிழ் ரீமேக் - இன்று முதல் படப்பிடிப்பு துவக்கம் என்ற போஸ்டரைப் பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago