விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ,'சகாப்தம்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த், தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்த பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
2010ல் விஜயகாந்த் இயக்கி நடித்த 'விருதகிரி'படத்தைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் என்று தகவல் வெளியானாலும், யார் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12ம் தேதி முதல் துவங்குகிறது. 'சகாப்தம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். சந்தோஷ்குமார் ராஜன் இயக்கவிருக்கிறார். சண்முகபாண்டியன் உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக, விஜயகாந்த் தயாரிப்பு நிறுவனமான 'கேப்டன் சினி கிரியேஷன்ஸ்' தெலுங்கில் ஹிட்டடித்த 'பிருந்தாவனம்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறது. 'பிருந்தாவனம்' ரீமேக்கா 'சகாப்தம்' என்பது இனிமேல் தான் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago