அஜித்தின் 'வீரம்' படத்தின் டீஸருக்கு திரையுலக பிரபலங்கள் இடையே அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஆரம்பம்' மக்களிடையே வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் தோல்வியால், தற்போது 'ஆரம்பம்' படத்திற்கு அதிகமான திரையரங்குகளும், காட்சிகளும் கிடைத்திருக்கின்றன.
இந்நிலையில் பொங்கலுக்கு அஜித் நடிக்கும் 'வீரம்' திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் பாஸ்ட் லுக் டீஸர் 7ம் தேதி ‘ஆரம்பம்’ திரையிடப்படும் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம் என்று அறிவித்திருந்தார்கள்.
7ம் தேதி இரவே YOUTUBE தளத்தில் ‘வீரம்’ படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. அஜித்தின் வசனம் எதுவும் இல்லாமால், பின்னணியில் ’இவன் மதம் புஜம் இரண்டும்.. மலை என எழுந்திட.. செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்’ என்ற பாடலோடு வெளியாகி இருக்கிறது. இது ட்விட்டர் தளத்தில் பல்வேறு பிரபலங்கள் இடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை டீஸரை கண்டுகளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ், சிவகார்த்திகேயன், தயாநிதி அழகிரி, உதயநிதி ஸ்டாலின், ஜிவா, வெங்கட்பிரபு, ஜி.வி.பிரகாஷ், பியா, ப்ரியா ஆனந்த் என பலரும், “மாஸ் டீஸர்” என குறிப்பிட்டு படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தின் டிரெய்லர், பாடல்கள் எப்போது வெளியாகும் போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 10ம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago