‘வனமகன்’ படத்தை முடித்துவிட்டு ‘டிக்:டிக்:டிக்’, ‘சங்கமித்ரா’ என்று தன் அடுத்த படங்களில் பரபரப்பாகிவிட்டார் ஜெயம் ரவி. ‘தி இந்து’வுக்காக அவரைச் சந்தித்தோம்.
“தலக்கோணம் காட்டுக்குள் அமைத்திருந்த அரங்கில் ஒருநாள் காலையில் படப்பிடிப்புக்குச் சென்றோம். அங்குச் சிறுத்தை ஒன்று படுத்திருந்தது. ஒரு நிமிடத்தில் ஒட்டுமொத்தப் படக்குழுவும் நடுங்கிவிட்டோம். எந்தப் பக்கம் ஓடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். பயத்தில் ஒன்றுமே புரியவில்லை.
ஆனால் நாங்கள் பயந்ததற்கு நேர்மாறாக எங்களைப் பார்த்தவுடன் சிறுத்தை எழுந்து, கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு மறுபடியும் காட்டுக்குள் சென்றுவிட்டது. இதே மாதிரி இப்படத்தின் படப்பிடிப்பின்போது பல விலங்குகளைப் பார்த்துள்ளோம். பல ஆபத்துகளைக் கடந்துள்ளோம். ஆனால் படம் நன்றாக வந்திருப்பதைப் பார்த்ததும் அந்த கஷ்டங்கள் எல்லாம் மறந்து போய்விட்டன” என்றவாறு பேசத் தொடங்கினார் ஜெயம் ரவி.
‘வனமகன்’ படத்துக்காக நிறைய அடிகள் வாங்கியதாக சொல்கிறார்களே?
இது ஆதிவாசியைப் பற்றிய கதை. ஆதிவாசிகளின் உடையே மிகவும் குறைவாகத்தான் இருக்கும். உடைகள் குறைவு எனும்போது மரம் ஏறுவது, தாண்டுவது உள்ளிட்ட காட்சிகளில் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களையும் போட்டுக்கொள்ள முடியாது. அதனால் அடிக்கடி அடிபடுவது சகஜமாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல என்னுடன் நடித்த பல நடிகர்களுக்கும் அடிபட்டுள்ளது. இப்படத்துக்காக கிட்டத்தட்ட 55 மரங்கள் வரை ஏறியிருப்பேன். உடல்ரீதியாக 5 படங்களுக்கு நிகராக இப்படத்துக்காக உழைத்துள்ளேன்.
அடுத்து வெளிவரவுள்ள ‘டிக்:டிக்:டிக்’ படத்தைப் பற்றி...
இப்படத்தின் கதை விண்வெளியை அடிப்படையாக கொண்டது. இதில் என் மகன் ஆரவ், என் மகனாகவே நடிக்கிறார். ஆரவ்க்கு கொஞ்ச நாள்தான் படப்பிடிப்பு என்றாலும், படம் முழுக்கவே இருப்பார். கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘சங்கமித்ரா’ படத்துக்காக எப்படி தயாராகி வருகிறீர்கள்?
என் வாழ்க்கையில் மிகவும் கடினமான படமாக இது இருக்கும். இதில் என் கதாபாத்திரத்தைப் பற்றி சொல்ல முடியாது. உடல்ரீதியாக ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும் என்று சுந்தர்.சி சார் கூறியுள்ளார். அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளேன். முடியைக் கொஞ்சம் வளர்த்து, லுக் டெஸ்ட் ஒன்றும் விரைவில் செய்யவுள்ளோம். இந்த படத்துக்காக ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கியுள்ளேன்.
படங்களுக்கு உடனே விமர்சனங்கள் வருவ தால் வசூல் குறைகிறது, 3 நாட்கள் கழித்து விமர்சனம் செய்யலாம் என்று சிலர் பேசி வரு கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
மோனாலிசா ஓவியத்தைச் சமீபத்தில் பார்த்தேன். நாம் மோனாலிசா ஓவியத்தைப் பற்றி அவ்வளவு பேசுகிறோம். ஆனால், நேரில் பார்க்கும்போது ஓவியம் மிகவும் சிறிதாக இருந்தது. ஆனால், நான் அங்குச் சென்று பார்க்கும் முன்பு, ‘ஓவியம் ரொம்ப சிறியதுப்பா. நீ நினைக்குமளவுக்கு பெரி யது கிடையாது’ என என்னிடம் யாராவது சொன்னால் போகலாமா, வேண்டாமா என்று யோசித்திருப்பேன். அதைச் சொல்லா மல் விட்டுவிட்டோம் என்றால் போக வேண் டும் என்று நினைப்பவர்கள் சென்று பார்ப் பார்கள். அப்படித்தான் விமர்சனமும்.
எதை யும் பாசிட்டிவ்வாக சொன்னால் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. சினிமா மற்றும் ஊடகம் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று தொடர் புடையது. ஆகையால் இரண்டும் ஒன்றுக்கு மற்றொன்று உதவியாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago