கோச்சடையான் அடுத்து ரஜினி நடிக்கும்...?

By ஸ்கிரீனன்

'கோச்சடையான்' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் படத்தின் இயக்குநர் யார் என்பது தான் லேட்டஸ்ட் டாக்.

'எந்திரன்' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்க, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் பூஜை போடப்பட்ட படம் 'ராணா'. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்படம் டிராப்பானது.

அதனைத் தொடர்ந்து, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'கோச்சடையான்' படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 'கோச்சடையான்' ஒரு MOTION CAPTURE TECHNOLOGY படம் என்பதால் ரஜினி நடித்தது 15 முதல் 20 நாட்கள் தான். கேரளா, லண்டன் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

சீனாவில் 'கோச்சடையான்' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி தயாராகும் வரை சென்னை வருவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறாராம் இயக்குநர் செளந்தர்யா. 'கோச்சடையான்' படத்தின் இசை மற்றும் திரைப்பட வெளியீடு இதுவரை 4 முறை தள்ளிவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் இசை வெளியீடு, ஏப்ரலில் படத்தினை வெளியிடலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. செளந்தர்யா சீனாவில் இருந்து திரும்பியவுடன் தான் எதுவுமே முடிவு செய்யப்படும் என்று பேச்சு நிலவுகிறது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த பேச்சுகள் தற்போது வெளியாகியுள்ளது. கே.எஸ்.ரவிகுமார், கே.வி.ஆனந்த், ஷங்கர், பி.வாசு ஆகியோர் ரஜினியின் அடுத்த படத்தினை இயக்கும் போட்டியில் இருந்தார்கள்.

"நான் சுதீப் நடிக்கவிருக்கும் படத்தினை இயக்கவிருக்கிறேன். நான் இல்லை" என்று ஒதுங்கி விட்டார் கே.எஸ்.ரவிகுமார். "சந்திரமுகி - 2 கதை தயாராக இருக்கிறது. ரஜினி நடித்தால் மட்டுமே இயக்குவேன்" என்று கூறியுள்ளார் இயக்குநர் பி.வாசு.

ஷங்கர், கே.வி.ஆனந்த் ஆகியோரை சுற்றி தான் தற்போது ரஜினியின் அடுத்த படத்தின் செய்திகள் உலா வருகின்றன.

ரஜினியிடம் இருந்து "எனது அடுத்த படத்தின் இயக்குநர் ......................" என்ற அறிக்கை வரும்வரை இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடையாது என்பது மட்டும் உண்மை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்