கிரிக்கெட்ல விராட் கோலி நல்ல ஃபார்ம்ல இப்போ விளையாடிட்டி ருக்கார். திடீர்னு ஒரு தொடர்ல கொஞ்சம் நார்மலா விளையாடினா, ‘‘லவ்ல விழுந்ததாலதான் கோலி சரியா விளையாடலை’’ன்னு உடனே கமெண்ட் வந்துச்சு. ஆனா, இப்போ அவர் இன்னும் பயங்கரமா கலக்கிட்டிருக்கார். அதேபோல அவர் இப்பவும் லவ்ல தான் இருக்கார். ஆனா, யாரும், ‘‘அவர் லவ்ல இருக்கார். அதனாலதான் கலக்குறார்’’னு சொல்றதே இல்லை.
நானும் இந்த மாதிரி சம்பவங்களைக் கடந்துதான் வந்திருக்கேன். லவ்ல இருக் குறப்ப, ஒரு படம் எதிர்பார்த்த அளவு போகலைன்னா, ‘‘லவ்ல இருக்காரு. அதனாலதான் இந்தப் படம் சுமாரா இருக்கு’’ன்னு சொன்னாங்க. இதில் என்ன வேடிக்கையான விஷயம்னா, எதிர்ல இருக்குறவங்க விமர்சனம் பண்ற மாதிரியே அந்த நேரத்துல எடுக்குற சில படங்களும் அமைஞ்சிடுது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த மாதிரிதான்.
இவ்வளவுக்கும் அந்த நேரத்துல ரொம்ப கவனமா வேலைகளைப் பார்க்கத்தான் செய்வோம். நார்மலா 12 மணி நேரம் உழைக்குறோம்னா, லவ் டைம்ல 15 மணி நேரம் உழைச்சிருக்கேன். உழைப்போம். உதாரணத்துக்கு, ஒரு படத்தோட எடிட்டிங்குக்குப் போவேன். நார்மலா ஏழுலேர்ந்து எட்டு மணி நேரம் வரைக்கும் ஒர்க் பண்ணினா, லவ் காலத்துல பத்துலேர்ந்து 11 மணி நேரம் வரைக்கும் ஒர்க் பண்ணுவோம்.
இந்த மாதிரி லவ் நேரத்துல ரெண்டு, மூணு முறை போன் வரும். மொத்தமா 45 நிமிஷம் வரைக்கும் பேசியிருப்பேன். அதுக்காக ஒன்றரை மணி நேரம் சேர்த்து எடிட்டிங்குல இருப்பேன். ஆனா, அப்படி ஒர்க் பண்ணதை விட்டுட்டு நான் பேசின அந்த 45 நிமிஷம்தான் எல்லா இடத்துக்கும் நியூஸா போகும். நார்மலா காதலை வீட்லதான் எதிர்ப்பாங்க. மறை முகமா வெளியிலயும் எதிர்க்கத்தான் செய்றாங்க. அதுவும் சினிமாக்காரங்க காதல்னா நிறையப் பேர் எதிர்க்கிறாங் கன்னுதான் நினைக்கிறேன்.
இந்த மாதிரி நேரத்துல சும்மா ஜாலியா என் ஃபிரெண்ட்கிட்ட பேசுறப்ப, ‘‘ஏண்டா வருஷத்துக்கு கிட்டத்தட்ட 120 படங்கள் ரிலீஸாகுது. அதில் பத்துலேர்ந்து 20 படங் கள் நல்லா ஓடுது. மிச்சம் 100 படங்களும் சரியில்லைன்னுதான் சொல்றாங்க. அப்போ அந்த 100 படங்கள் பண்ணின எல்லாருமே லவ்லயா இருக் காங்க?’’ன்னு கேட்பேன். அதுக்கு என் ஃபிரெண்ட் என்னைப் பார்த்து ‘‘இருக்க லாம்டா’’ன்னு கிண்டலா சொல்வான். உடனே நான், ‘‘அப்போ லவ் பண்ணாத வங்க படம்தான் ஓடுமா? லவ் பண்ணா தவங்கதான் உழைக்கிறாங்களா? லவ் பண்ற யாரும் உழைக்கலையா?’’ன்னு திரும்பவும் கேட்பேன். அதுக்கு அவன், ‘‘டைம் ஆகிடுச்சு. வீட்டுக்குக் கிளம்புறேன்டா’’ன்னு சொல்லிட்டு கிளம்பிடுவான்… மடசாமி. இங்கே லவ் படம் ஓடும். லவ் பண்றவங்க படம் ஓடாது. ஆக மொத்தத்துல சினிமா, விளையாட்டு மாதிரி மக்களுக்கு பிடிச்ச துறையில இருந்தா லவ் பண்ணக் கூடாதுன்னு நினைக்கிறேன். இங்கே காதல்ல இருந்தா சரியா வேலைசெய்ய மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கையே இருக்கு.
இதில் இன்னொரு விஷயம், நம்ம கூடவே இருக்குற, நம்மை நல்லாத் தெரிஞ்சவங்களே, ‘‘தப்பா நினைக்காதீங்க. காதல்ல இருக்குற தாலதான் நீங்க சரியா ஒர்க் பண்ணலையா?’’ன்னு கேட்பாங்க. தெரி யாதவங்க இப்படி கேட்டா பரவா யில்லை. ஆனா, நம் கூடவே இருக்குற வங்க கேட்கிறப்ப ஒரு மாதிரியா இருக்கத்தான் செய்யுது.
ஹிந்தியில ‘வான்டட்’ படம் ரிலீஸாகி பெரிய அளவுல ஹிட் ஆச்சு. அந்த நேரத்துல காதல்லதான் இருந்தேன். அப்போ என்கிட்ட யாருமே, ‘‘லவ்ல இருக்குறதுனாலதான் இந்தப் படத்தை ஹிட் அடிச்சீங்களா?’’ன்னு கேட்கவே இல்லை. ‘வான்டட்’ 100 கோடி கிளப்ல முதல் படம்னு ஹிந்தி சினிமாவையே புரட்டிப் போட்டுச்சு. ஆனா, அந்த நேரத் துல அதையெல்லாம் யாருமே பெருசா எடுத்துக்கலை. இதையெல்லாம் வெச் சிப் பார்க்கிறப்ப சினிமாக்காரங்க லவ்ல இருக்குறது யாரும் விரும் புறதில்லைன்னு மட்டும்தான் தோணுது.
அதே மாதிரி காதல்ல இருக்குறப்ப இன்னொரு விஷயத்தையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கு. சாதாரணமா ஒரு நிகழ்ச்சிக்கு போறோம்னா, அங்கே வந்திருக்குறவங்கள்ல பல பேர், ஏதோ நாம பெரிய தப்பு பண்ணிட்டு வந்திருக்குற மாதிரியே ஒரு பார்வை பார்ப்பாங்க. அதுலேயும் ஒரு சில நிகழ்ச்சிக்காக வெளியில வர்றப்ப பத்திரிகைகாரங்க கேள்வி கேட்பாங்க. அந்த நேரத்துல நாம நேஷ்னல் அவார்டு, ஸ்டேட் அவார்டுல்லாம் வாங்கியிருந் தாக் கூட ‘‘பர்ஷனல் லைஃப் பத்தி சொல்லுங்க’’ன்னு ஆர்வமா அதைத்தான் கேட்பாங்க. இந்த மாதிரி கேட்குறப்ப பெரும்பாலும் எனக்கு சிரிப்புதான் வரும்.
‘வான்டட்’ படம் ரிலீஸாகி நல்லா போய்ட்டிருந்தப்ப பேட்டிக்காக வந் தாங்க. முதல் கேள்வியா, ‘‘படம் ரிசல்ட் பயங்கரமா இருக்கே?’’ன்னு கேட்டாங்க. அதுக்கு நான் பதில் சொல்றதுக்குள்ள, ‘‘ஆமாமாம்’’னு அவங்களே சொல் லிட்டு, அடுத்த கேள்வியா ‘‘போக்கிரி ரீமேக் படமாச்சே?’’ன்னு கேட்டாங்க. அதுக்கு நான் பதில் சொல்லும்போது பாதியிலேயே, ‘’ஓ.கே.. ஒ.கே சார்!’’னு சொல்லிட்டு ‘‘லவ் விஷயத்தை பத்தி சொல்லுங்க?’’ன்னு நெக்ஸ்ட் கேள்விக்கு வந்துட்டாங்க. அந்த நேரத்துல ‘‘பர்சனல் வேண்டாமே?’’ன்னு சொல்வேன். அப்பவும் சிலர், ‘‘என்கிட்ட மட்டும் சொல்லுங்க. நான் யார்கிட்டயும் சொல்ல மேட்டேன்’’ன்னு சொல்வாங்க. என்னால சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது. ஒரு குழந்தைட்ட பேசுற மாதிரிதான் அவங்க ட்ரீட் பண்ணுவாங்க. எப்படி என்னால சிரிக்காம இருக்க முடியும்?
அந்த மாதிரி நேரத்துல வெளிவர்ற எல்லா பேட்டிகளுமே காதல்லதான் போய் முடியும். பேட்டியோட தலைப்புக் கூட அது சம்பந்தமாதான் இருக்கும். நார்மலா ஒரு படம் ஹிட் கொடுத்தா அஞ்சு பேரு பேட்டி வேணும்னு கேட்டு வந்தா, காதல் சமயத்துல 15 பேர் பேட்டி வேணும்னு கேட்பாங்க. என்ன பண்றது அதுதான் எல்லாருக்குமே பிடிக்குதுன்னு நினைக்கிறேன்.
இந்த மாதிரி பேட்டிகளைப் பார்த்துட்டு என் ஃபிரெண்ட் போன்ல கூப்பிட்டு, ஏதோ ஒரு ஊர் பேரை சொல்லி ‘‘என்னடா நேத்து நீ வந்து பார்த்துட்டு போனியாமே?’’ன்னு கேட்பான். நான் வேற எங்கேயோ வேலை பார்த்துட்டிருக்கேன்னு அவனுக் கும் தெரியும். இருந்தாலும் என்னை கலாட்டாப் பண்றதுக்காகவே அப்படி கேட்பான். நானும் சிரிச்சிட்டே, ‘‘டேய்… அங்க போய் பார்த்தது தேவாடா. இங்கே பிரபு வேலை பார்த்துக்கிட்டிருக்கான். நீ தேவாகிட்ட போன் செஞ்சு கேளுடா’’ன்னு சொல்லிடுவேன்.
இப்படி தெரிந்தவங்க, தெரியாத வங்க, பத்திரிகைகாரங்க வரைக்கும் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ற வேலையை காதல் செய்ய வைக்கும். ஏன்னா, காதல் லைஃப்ல ஒரு பார்ட். எப்பவுமே அது சம்பந்தமா எதிர்கொள்கிற, காதுக்கு வர்ற விஷயங்களை பாசிடிவ்வாக, ஜாலியாக எடுத்துக்கணும்னு நினைக்கிறேன்.
அதே மாதிரி லவ் பண்ற நேரத் துல நம்மை அறியாமலேயே ஒரு தைரியமும் வரும். அந்த தைரியம் என்னவெல்லாம் செய்யும்கிறதை அடுத்துச் சொல்றேன்.
- இன்னும் சொல்வேன்...
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago