கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில், ராஜேஷ் இயக்கியிருக்கும் படம் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'. தமன் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ராஜேஷ் இயக்கும் படம் என்றாலே காமெடிக்கு கியாரண்டி என்றாகிவிட்டது. முதன் முறையாக கார்த்தியுடன் ராஜேஷ் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை.
அப்பா-மகன் பாசப் பிணைப்புதான் படம். கார்த்தி கல்யாணமே வேண்டாம் என்ற தீர்மானத்தோடு இருப்பவர். அவருக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என பிரபு விடாப்பிடியாக போராடுகிறார். பிரபுவின் ஆசை நிறைவேறியதா என்பது தான் 'ஆல் இன் ஆல் அழகுராஜா'வின் கதை.
‘குட்கா’ முகேஷை கிண்டல் செய்யும் விதத்தில் படத்தின் டீஸர் வெளியான போதே, படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. படத்தின் டிரெய்லர், பாடல்கள் என வெளியானது போது கண்டிப்பாக காமெடி சரவெடி தீபாவளிக்கு காத்திருக்கிறது என்று முடிவு செய்தனர் ரசிகர்கள்.
இப்படத்தில் வரும் ப்ளாஷ்பேக்கில், சின்ன வயது பிரபுவாக கார்த்தி நடித்திருக்கிறார். அந்த 20 நிமிட ப்ளாஷ் பேக் கண்டிப்பாக மக்களைக் கவரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
ராஜேஷ் - சந்தானம் கூட்டணி என்றாலே படத்தின் ஒன் லைன் வசனங்கள் இளைஞர்கள் மத்தியில் டாக்காக இருக்கும். 'The Choice is Yours', 'No Emotion.. No Emotion.. Leave it', 'இந்த பணிவு உங்கள எங்கேயோ கொண்டு போக போகுது', 'நீ பொழைச்சுக்குவடா, நீ பொழைச்சுக்குவ' என இந்த படத்திலும் அம்மாதிரியான வசனங்கள் இருக்கின்றன.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், விளம்பரத்திற்காக பணத்தினை வாரி இறைத்திருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பெங்களூர், கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருநெல்வேலி என அனைத்து ஏரியாக்களுக்கும் சென்று வந்திருக்கிறார் கார்த்தி.
நவம்பர் 2ம் தேதி தீபாவளி தினத்தன்று காமெடி சரவெடி வெடிக்க இருக்கிறார் இந்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா'.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago