ஜில்லா மெலடியில் விஜய்!

By ஸ்கிரீனன்

'ஜில்லா' படத்திற்காக மெலடி பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் நடிகர் விஜய்.

தன் படத்தில் பாடல் பாடுவது விஜய்க்கு புதிதல்ல. சூப்பர் ஹிட்டடித்த 'துப்பாக்கி' படத்தில் இடம்பெற்ற 'கூகுள் கூகுள்' பாடல் விஜய் பாடியது தான்.

அப்பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால், அடுத்து நடிக்கவிருக்கும் விஜய் படங்கள் அனைத்திலும், அவரை ஒரு பாடல் பாடவைத்து ஆல்பத்தினை ஹிட்டடிக்க வைக்க வேண்டும் என்பது இசையமைப்பாளர்களின் ஆசையாக இருக்கிறது.

தற்போது விஜய் நடித்துவரும் 'ஜில்லா' படத்திற்கு இசையமைத்து வருகிறார் இமான். அப்படத்திற்காக விஜய் பாட மெலடி பாடல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இப்பாடலை விஜய்யுடன் இணைந்து பாடியிருக்கிறார் பாடகி ஸ்ரேயா கோஷல்.

குத்துப் பாடல் போல அல்லாமல், முழுக்க விஜய்யின் மென்மையான குரலில் இடம்பெறுவது போன்று பாடலுக்கு இசையமைத்திருக்கிறாராம் இமான்.

விஜய் நடிப்பில் அடுத்து தயாராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும் விஜய் பாட இருக்கிறார். அப்படத்திற்கு இசையமைக்க இருக்கும் அனிருத், இப்போதே 'Why this Kolavaeri di' இசை போன்று ஒரு துள்ளலான இசையை தயார் செய்திருக்கிறார்.

அப்படம் துவங்கும் போது, பாடலை விஜய்யை பாடவைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார். 'Why this Kolaveri Di' பாடலை எப்படி உலகமெங்கும் பிரபலமோ அதைப் போன்று இப்பாடல் பிரபலமடைய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம் அனிருத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்