ஹன்சிகாவோடு பிறந்த நாளைக் கொண்டாடிய சிம்பு

By ஸ்கிரீனன்

நேற்றிரவு 12 மணிக்கு தனது நண்பர்களோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் சிம்பு. அதில் ஹன்சிகாவும் கலந்து கொண்டார்.

இன்று சிம்பு தனது 30வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பாண்டிராஜ், கெளதம் மேனன் ஆகியோரின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதால் சிம்பு பிறந்த நாளை கொண்டாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், நேற்றிரவு 12 மணிக்கு சிம்புவின் நண்பர்கள் அவரின் இருப்பிடதற்கு கேக்கோடு சென்றுள்ளனர். சிம்பு அவர்களோடு இணைந்து தன் பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார். அதில் சிம்புவின் காதலி ஹன்சிகாவும் கலந்து கொண்டு சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற ஹன்சிகாவின் பிறந்தநாளன்று, அரண்மனை வடிவத்தில் கேக் ஒன்றை அனுப்பி வைத்து தனது காதலை வெளிப்படுத்தினார் சிம்பு. ஆனால், அதனைத் தொடர்ந்து சிம்புவின் கேள்விகளுக்கு ஹன்சிகா பதில் சொல்வதைத் தவிர்த்து வந்தார்.

தற்போது சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு அவர்களது காதலை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இன்று மாலை பிறந்த நாள் பார்ட்டி தருவதாக தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார் சிம்பு.

சிம்புவின் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக, கெளதம் மேனன் படத்தின் டீஸர் மற்றும் 'வாலு' படத்தின் U R MY DARLING பாடலின் டீஸரும் வெளியாகி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்