யூ-டியூப் தளத்தில் ஆரண்ய காண்டம் மீண்டும் வெளியீடு!

By செய்திப்பிரிவு

விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஆரண்ய காண்டம்' படத்தினை யூ-டியூப் தளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள்.

'ஆரண்ய காண்டம்' படத்தினை நேற்று காலை விஜய் டி.வியின் யூ.டியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்தார்கள்.

’மெரினா’. ’கும்கி’, ’துப்பாக்கி’, ’நண்பன்’, ’போடா போடி’, ’சாட்டை’, ’நடுநிசி நாய்கள்’, ’இனிது இனிது’, ’களவாணி’ ஆகிய படங்களை ஏற்கனவே விஜய் டிவி யூ- டியூப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.

இவ்வரிசையில், ’ஆரண்ய காண்டம்’ படமும் பதிவேற்றம் செய்ததால், அது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தினை ஏற்படுத்தியது. படத்தின் ஒரிஜினல் சி.டிக்கள் கிடைக்காததால், அனைவருமே யூ.டியூப் லிங்க்-கை தங்களது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து வந்தார்கள்.

இந்நிலையில், பதிவேற்றம் செய்த சில மணி நேரத்தில் விஜய் டி.வி நிறுவனம் யூ-டியூப் தளத்தில் இருந்து அப்படத்தினை நீக்கியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். விஜய் டி.வி நிறுவனம் மாலை மீண்டும் வெளியிடப்படும் என்று அறிவித்தது.

அன்று மாலையே 'ஆரண்ய காண்டம்' படத்தினை மீண்டும் பதிவேற்றம் செய்தார்கள். எதனால் நீக்கி மீண்டும் பதிவேற்றம் செய்தார்கள் என்று விசாரித்த போது, முதலில் சென்சார் செய்யாத படத்தினை வெளியிட்டு விட்டார்களாம். அதனால் நீக்கிவிட்டு, மாலை சென்சார் செய்யப்பட்ட படத்தினை மீண்டும் பதிவேற்றி இருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்