பாலா - சசிகுமார் இணையும் தாரை தப்பட்டை

By ஸ்கிரீனன்

பாலா - சசிகுமார் இணையும் படத்திற்கு 'தாரை தப்பட்டை' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

'பிரம்மன்' படத்தினைத் தொடர்ந்து பாலா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டார் சசிகுமார். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

சசிகுமார் ஜோடியாக நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தினை பாலா மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்காக பாலா, சசிகுமாரின் கெட்டப்பை மாற்றிவிட்டார். படப்பிடிப்பு முடியும்வரை வெளியில் போகக்கூடாது என்று அன்புக் கட்டளை போட்டிருக்கிறார். தாடியை எல்லாம் எடுத்து பென்சில் மீசை போன்று வைத்திருக்கிறார் சசிகுமார். வரலெட்சுமி சரத்குமாரையும் உடம்பை கொஞ்சம் குறைக்க சொல்லி இருக்கிறார்.

இப்படத்தில் சசிகுமார் நாதஸ்வர வித்வானாகவும், வரலெட்சுமி கரகாட்ட கலைஞராகவும் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்திற்கான பாடல்களை இளையராஜா முடித்து கொடுத்து விட்டார். இளையராஜா இசையமைப்பில் வெளிவரும் 1000வது படம் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், இளையராஜா தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்