அஜித் - கெளதம் மேனன் இணையும் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
'வீரம்' படத்தினைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் அஜித். இப்படத்தில் தனது வேடத்திற்காக உடலமைப்பை மாற்றி வருகிறார் அஜித்.
இதுவரை சால்ட் & பெப்பர் லுக்கில் நடித்து வந்த அஜித், இப்படத்தில் அதிலிருந்து வெளியே வர திட்டமிட்டு இருக்கிறார். அஜித்தின் பாத்திர வடிவத்திற்கு ஏற்றவாறு முழுவதுமாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறார் கெளத மேனன். என்ன கெட்டப் என்பது வெளியே தெரியக்கூடாது என்பதால், அஜித் தனது பண்ணை வீட்டில் இருந்து வெளியே வருவதில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியுள்ள படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், "அஜித்திற்கு ஜோடியாக முதல் முறையாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் இன்னும் முடிவாகவில்லை. படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் துவங்குகிறது" என்று கூறியிருக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
பிப்ரவரி 27ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago