தமிழில் அறிமுகமாகிறார் மம்முட்டியின் மகன்

By ஸ்கிரீனன்

மம்மூட்டியின் மகன் துல்கார் சல்மான், பாலாஜி மோகன் இயக்கும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

'காதலில் சொதப்புவது எப்படி' என்ற குறும்படம் மூலம் பிரபலமாகி, அதனைத் திரைப்படமாகவும் இயக்கியவர் பாலாஜி மோகன். சித்தார்த், அமலா பால் நடித்த அப்படம் வரவேற்பைப் பெற்றது.

அதற்குப் பிறகு பாலாஜி மோகன் தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்துக் கொண்டிருந்தார். தனது அடுத்த படத்தினையும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் என்று அறிவித்திருந்தார். படத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது குறித்து எதுவும் தகவல் அளிக்கவில்லை.

மம்மூட்டியின் மகன் துல்கார் சல்மானை தமிழில் அறிமுகம் செய்கிறார் பாலாஜி மோகன். இவர் ஏற்கனவே மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன், நஸ்ரியா நாயகியாக நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இப்படத்தினை ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரேடியன்ஸ் மீடியா இணைந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரிக்கவிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்