தீவிரமாகும் லிங்கா போராட்டம்: ரஜினிக்கு விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை

By ஸ்கிரீனன்

'லிங்கா' படத்தின் இழப்பீடு விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிடவிட்டால் சாகும் வரை குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் இருப்போம் என்று விநியோகஸ்தர்கள் எச்சரித்துள்ளனர்.

‘லிங்கா' திரைப்படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு செய்யக் கோரி விநியோகஸ்தர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறார்கள்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சீமான், தயாரிப்பாளர் காமாட்சி, நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

உண்ணாவிரதப் போராட்டாத்தில் கலந்துகொண்ட விநியோகஸ்தர்களின் பிரதிநிதி பேசியபோது "தமிழ்நாட்டில் எங்களுக்கு தெரிந்த ஒரே ஆள் சூப்பர் ஸ்டார்தான். ரஜினிகாந்த் என்பவரை நம்பி மட்டுமே இந்தப் படத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருக்கிறோம். வேறு எத்தனையோ படங்கள் வெளியாகிறதே அதனை இந்த விலை கொடுத்து வாங்கியிருக்கிறமோ?

ரஜினிக்காக மட்டுமே இந்தப் படத்தை வாங்கியிருக்கிறோம். 220 கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். 39 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. லாபத்தில்தான் நாங்கள் நஷ்டத்தை கேட்கிறோம். நஷ்டத்தில் லாபத்தை கேட்கவில்லையே. ரஜினி, ராக்லைன் வெங்டேஷ், ஈராஸ் நிறுவனம் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும்.

முதல் காட்சியில் 2000 பேர் படம் பார்த்தார்கள். இரண்டாவது காட்சியில் 900 பேர்தான். அவருடைய ரசிகர்களுக்கே அந்தப் படம் பிடிக்கவில்லை. நாங்கள் அந்தப் படத்தை பற்றி எந்த ஒரு குறையும் சொல்லவில்லை. விநியோகஸ்தர்கள் காசு கொடுத்து படம் வாங்கியிருக்கிறோம்.

ரஜினியின் முதல் படங்கள் எல்லாம் 16 கோடி மேல் வியாபாரம் ஆகவில்லை. 'சிவாஜி' படத்தில்தான் ரஜினி, ஷங்கர் என சேர்ந்து 45 கோடி வியாபாரம் ஆனது. அடுத்த படம் 'எந்திரன்' 60 கோடி வியாபாரம் ஆனது. ரஜினிகாந்த் 'லிங்கா' இசை வெளியீட்டு விழாவில் கூட "என்னால் யாருமே நஷ்டம் அடைய மாட்டார்கள். இந்தப் படம் ஒரு மைல்கல்" என்றார். அதை நம்பித்தான் இப்படத்தை வாங்கினோம்.

சின்ன நஷ்டம் என்றால் ஏற்றுக் கொள்வோம். 75% நஷ்டம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என அனைவரும் ஈட்டிய லாபத்தில் 10% கொடுத்தால் எங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்.

ரஜினி படத்தை தவிர வேறு ஒரு நடிகர் படத்தை 65 கோடிக்கு வாங்குவோமா? ரஜினி இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்க்காவிட்டால் சாகும்வரை குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருப்போம். இதில் எந்தவித மாற்றமும் இல்லை" என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்