வடகறி படத்தில் இருந்து யுவன் விலகல்

By ஸ்கிரீனன்

'வடகறி' படத்தில் யுவனுக்கு பதிலாக விவேக் - மெர்வின் இருவரும் இசையமைப்பாளர்களாக பணியாற்றி வருவதாக தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அறிவித்துள்ளார்.

ஜெய், சுவாதி மற்றும் பலர் நடித்து வரும் படம் 'வடகறி'. தயாநிதி அழகிரி தயாரித்து வரும் இப்படத்தினை இயக்கி வருகிறார் சரவணராஜன். இப்படத்திற்கு முதலில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வந்தார்.

இப்படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் என்ற செய்திகள் வெளியான போது, இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிடைத்தது. தற்போது யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக தயாநிதி அழகிரி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்...

"'வடகறி' படத்திற்காக யுவன் முதலில் கொடுத்த ஒரு மெலடிப் பாடலை படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம்.

தற்போது, பல படங்களுக்கு யுவன் இசையமைத்து வருவதால் பிஸியாக இருக்கிறார். ஆகையால் 'வடகறி' படத்திற்கு தொடர்ந்து இசையமைக்கும் பொறுப்பில் ஈடுபட முடியாமல் போனது. இதனால் அனிருத்தை இசையமைக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவர் தன்னிடம் பணியாற்றும் விவேக் சிவா - மெர்வின் சாலமன் இருவரும் நன்றாக இசையமைப்பார்கள் என்றும், இந்த வாய்ப்பை அவர்களுக்கு அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

இதனால் 'வடகறி' படத்தின் மீதமுள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைக்கும் பணியில் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் இருவரும் இணைந்து பணியாற்றுகிறார்கள். இவர்கள் இசையமைத்த நன்கு பாடல்கள் இப்படத்தில் இடம்பெறும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

விவேக் சிவா (23) மற்றும் மெர்வின் சாலமன் (24) என வெகுநாட்கள் கழித்து ஒரு இரட்டை இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சினிமா

25 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்