7 வருடங்கள் கழித்து அஜித் - விஜய் இருவரது படங்களும் ஒரே தேதியில் வெளியாக இருக்கிறது.
அஜித், விஜய் இருவரது படங்களும் ஒரே தேதியில் வந்தால், படத்தின் வசூல் பாதிப்படையலாம் என்பதால் நீண்ட வருடங்களாக இருவரது படங்களும் ஒரே தேதியில் வெளியாகவில்லை.
பகவதி - வில்லன் (2002), திருமலை - ஆஞ்சநேயா (2003), ஆதி - பரமசிவன் (2006) மற்றும் போக்கிரி - ஆழ்வார் (2007) ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து ஒரே தேதியில் தங்களது படங்கள் வெளியிடுவதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் 7 வருடங்கள் கழித்து அஜித்திற்கு 'வீரம்', விஜய்க்கு 'ஜில்லா' ஆகிய படங்கள் பொங்கல் 2014ல் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'வீரம்'. இப்படத்திற்கு FIRST LOOK போஸ்டர்கள் வெளியாகிவிட்டன. நேசன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் 'ஜில்லா'. இப்படத்தின் FIRST LOOK போஸ்டர்கள் மற்றும் டிரெய்லரை தீபாவளியன்று வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.
இவ்வாறு இரண்டு படங்களுமே பொங்கல் வெளியீட்டில் உறுதியாக இருப்பதால், விநியோகஸ்தர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்விரண்டு படங்கள் மட்டுமன்றி கார்த்தியின் 'பிரியாணி' படமும் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago