என்.டி.டி.வி. சேனல் தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, இணையத்தில் 'இந்தியாவின் 25 சிறந்த உலகளாவிய வாழும் சாதனையாளர்கள்' (INDIA's 25 GREATEST GLOBAL LIVING LEGENDS) என்ற கருத்துக் கணிப்பை நடத்தியது,
அக்கருத்து கணிப்பில் மிகச் சிறந்த 25 இந்தியர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில், அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், வகீதா ரகுமான் உள்ளிட்ட 25 பேர் இடம்பெற்றனர். அவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
'மிகச் சிறந்த இந்தியர்' என்ற விருதைப் பெற்றுக்கொண்டு ரஜினிகாந்த் பேசியது, "பலர் அதிசயங்கள் ஏற்படுவதை நம்ப மாட்டார்கள். எப்போதாவது அதிசயங்கள் நடந்து கொண்டுதானிருக்கும். ஒரு சாதராண பஸ் கண்டக்டராக இருந்த நான், இவ்வளவு பெரிய சாதனையாளர்களின் நடுவில் இருக்கிறேன் என்பது அதிசயம்தான்.
இந்த விருதை எனக்கு தாயும் தந்தையுமாக இருக்கும் என் அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட், எனது குரு கே.பாலச்சந்தர், தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்களது அன்பும், ஆதரவும் இல்லாமல் நான் இந்தளவிற்கு வந்திருக்க முடியாது" என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
23 hours ago