தெலுங்கு ரீமேக்காகும் பண்ணையாரும் பத்மினியும்

By ஸ்கிரீனன்

'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருக்கிறார் 'நான் ஈ' நாயகன் நானி.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பண்ணையாரும் பத்மினியும்'. அருண்குமார் இயக்கியுள்ளார்.

YOUTUBE தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பண்ணையாரும் பத்மினியும்' குறும்படத்தினை, அதே பெயரில் படமாக இயக்கியுள்ளார் அருண்குமார்.

இப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருக்கிறார் 'நான் ஈ’ நாயகன் நானி. இப்படத்தின் இசை வெளியீட்டில் கலந்துக் கொண்டு நானி பேசியது, “நானும், விஜய் சேதுபதியும், நெருங்கிய நண்பர்கள். அவர் நடிக்கும், அனைத்து படங்களையும் பார்த்து விடுவேன்.

இப்படத்தின் கதையை, அவர் கூறியதுமே, அதன் தெலுங்கு உரிமையை வாங்கி விட்டேன். இப்படத்தின் ரஷ் பார்த்ததுமே, எனக்கு சந்தோஷமாக இருந்தது.

அதே வேளையில், விஜய் சேதுபதி நடித்த அளவுக்கு நம்மால் நடிக்க முடியுமா என்ற பயமும் ஏற்பட்டது. எப்படியிருந்தாலும், இப்படத்தின் உரிமை, எனக்கு கிடைத்திருப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்