தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நாயகியானார் சமந்தா.
தெலுங்கில் 'Attarintiki Daredi' படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு சமந்தாவை தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நாயகியாக ஆக்கியுள்ளது.
அவர் பவன் கல்யாண் ஜோடியாக நடித்த 'Attarintiki Daredi' இந்தியாவில் இந்தி படங்களுக்கு நிகராக வசூலை ஈட்டி வருகிறது. முதல் 3 நாட்களில் மட்டும் 35 கோடி ரூபாய் வாரி இறைத்திருக்கிறது.
'Attarintiki Daredi' படத்தினைத் தொடர்ந்து சமந்தா ஜுனியர் என்.டி.ஆருடன் நடித்திருக்கும் 'Ramaiya Vastavaiya' பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இப்படத்தை அக்டோபர் 11ம் தேதி வெளியிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் முறையாக அறிவிக்கவில்லை.
தெலுங்கில் மோஸ்ட் வான்டட் நடிகையாக உள்ள சமந்தா, தமிழில் லிங்குசாமி - சூர்யா இணையும் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகிருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையும் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தமிழ்ப் படங்கள் தெலுங்கு டப்பிங்கிலும் வெளியாவதால், சமந்தாவை ஒப்பந்தம் செய்வது தயாரிப்பாளர்களுக்கும் நாயகர்களுக்கும் நல்லதாக இருக்கிறது.
தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் வசூலை வாரிக்குவித்து வருவதால், இப்போது தமிழ்த் திரையுலகிலும் இவரை பல்வேறு முன்னணி நாயகர்களுடன் நடிக்க தேதிகள் கேட்டு நச்சரித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago