லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' வெளியீட்டில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருவதால், வெளியீட்டில் தாமதமாகி வருகிறது.
சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் உருவான இப்படத்தின் வெளியீட்டு உரிமையை மதன் பெற்றிருந்தார்.
இப்படம் வெளியாகவிருந்த தருணத்தில் பணமோசடி விவகாரத்தில் மதன் கைது செய்யப்பட்டதால் இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியீட்டு உரிமையை மதனிடமிருந்து சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி பிப்ரவரி 17ம் தேதி வெளியீடு என அறிவித்தது.
லாரன்ஸ் தனது முழுசம்பளம் மட்டுமன்றி கொஞ்சம் பணம், பைனான்சியர்கள் கொஞ்சம் பணம் என பலர் விட்டுக்கொடுத்தும் இன்னும் இப்படத்தின் மீதுள்ள பணச்சிக்கல் தீரவில்லை. மேலும், ஒவ்வொரு வாரமும் இப்படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறார்கள்.
பிப்ரவரி 24ம் தேதியில் வெளியிட கடுமையாக முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக மார்ச் 17ம் தேதிக்கு வெளியிடும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவரிடம் பேசிய போது, "இப்படத்தின் மீது பல சிக்கல்கள் உள்ளது. முழுமையாக தெரிவிக்க இயலாது. ஒருவேளை அனைத்து சிக்கல்களும் முடிந்து மார்ச் 17ம் தேதி வெளியாகலாம். அப்படி வெளியாகவில்லை என்றால் 'மதகஜராஜா' படத்தின் நிலை தான் இதுக்கும்" என்று சோகமாக முடித்துக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago