பாலு மகேந்திரா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

By ஸ்கிரீனன்

இயக்குநர் பாலுமகேந்திரா உடல்நலக் குறைவால் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

' மூன்றாம் பிறை’, 'அழியாத கோலங்கள்', 'வீடு', 'சந்தியா ராகம்', 'மறுபடியும்', ’சதி லீலாவதி’ என தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா. இவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட. தனது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா தான்.

சமீபத்தில் வெளியான 'தலைமுறைகள்' இவர் இயக்கத்தில் வெளியானது. இயக்குநர் சசிகுமார் தயாரித்திருந்தார். விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று காலை பாலு மகேந்திராவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை விஜயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் தமிழ் திரையுலகினர் பலரும் மருத்துவமனைக்கு விரைந்த வண்ணம் உள்ளனர்.

இயக்குநர் பாலா, ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்