ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘கோச்சடையான்’ இசை பிப்ரவரி 15ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.
திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, சீனாவில் தங்கி கவனித்து வந்தார். குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதால் டிசம்பர் 12 வெளியாகவிருந்த ஆடியோ வெளியீட்டு விழாவை தள்ளிவைத்தார்கள். பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட 'கோச்சடையான்' படமும் வெளியாகவில்லை.
இந்நிலையில், 'கோச்சடையான்' படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம் " 'கோச்சடையான்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் இசை, பிப்ரவரி 15ம் தேதி வெளிவரும் என்று எங்களிடம் கூறியிருக்கிறது” என்று தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
பொங்கலுக்கு வெளியீடு என்ற திட்டம் தள்ளிப் போனதால், தற்போது பிப்ரவரியில் இசை வெளியீடு முடிந்து, படத்தை ஏப்ரலில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago