'Attarintiki Daaredhi' தமிழ் ரீமேக்கில் நடிக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்த தெலுங்கு ரீமேக் படங்கள் எப்போதுமே வரவேற்பை பெற்றிருக்கின்றன. 'போக்கிரி', 'கில்லி' உள்ளிட்ட படங்கள் இதற்கு சான்று.
தற்போது பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'Attarintiki Daaredhi' வசூலில் இந்திய அளவில் மட்டுமன்றி உலகின் பல பாகங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறது.
இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்குவதற்கும், நடிப்பதற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது விஜய் இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க மிகவும் ஆர்வம் காட்டியிருக்கிறாராம்.
இது குறித்து வந்துள்ள தகவலில் “'Attarintiki Daaredhi' படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமைக்கு பல்வேறு முன்னணி தயாரிப்பாளார்கள் பேசி வருகிறார்கள். ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. தமிழின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் முன்னணி நடிகரை வைத்து தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். இன்னும் 2 வாரத்தில் அனைத்தையும் முறையாக அறிவிப்பார்கள்.
விஜய்யும் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துருப்பதால் இப்போதைக்கு எதையுமே உறுதியாக சொல்லிவிட முடியாது.” என்று 'Attarintiki Daaredhi' தயாரிப்பாளருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago