பிரதீப் கிருஷ்ணமூர்த்தி - சிபிராஜ் இணையும் சத்யா

By ஸ்கிரீனன்

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்துவரும் படத்துக்கு 'சத்யா' எனத் தலைப்பிட்டுள்ளார்கள்.

'சைத்தான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அப்படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். தெலுங்கில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான 'சனம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் இருவரும் இணைந்தார்கள்.

சத்யராஜ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலெட்சுமி சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அருண்மணி ஒளிப்பதிவு செய்ய, சைமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்தின் முழுபடப்பிடிப்பையும் ஒரே கட்டமாக படக்குழு முடித்துவிட்டது. தற்போது இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்துக்கு கமலிடன் அனுமதி பெற்று, 'சத்யா' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். 'சத்யா' குழுவினருக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்