எப்பவுமே என்னை பிரமிப்பா பார்க்க வைக்கிறவங்க பதினோறாம் வகுப் புல பாஸ் ஆனவங்கதான். என்னைவிட அதிகம் படிச்சவங்களைப் பார்க்கும்போது அவங்க மிகப் பெரிய திறமைசாலின்னு தோணுது. ஆமாம், கண்டிப்பா அவங்க திறமையானவங்கதான்! ஏன்னா, என்னால அதை செய்ய முடியாமப் போச்சே. அதே மாதிரி என்னை பிரமிப்படைய வைக்கிற இன்னொரு விஷயமும் இருக்கு. அதைப் பின்னாடிச் சொல்றேன்.
‘காதலன்’ படத்துக்குப் பிறகு தொடர்ந்து ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு, ரொம்ப பிஸி யாயிட்டேன். படம் ஹிட் ஆனதும் இனிமே வெளியில அதிகமா தலைகாட்டக் கூடா துன்னு நினைச்சதே இல்லை. எப்பவும்போல ஃபிரண்ட்ஸ்களோட போய் ஹோட்டல்ல சாப்பிடுறது, வெளியில விளையாடறதுன்னு செஞ்சுக்கிட்டேதான் இருந்தேன். ஒரு படம் நல்லாப் போச்சுன்னா வெளியில அதிகம் முகம் காட்டுறது, இன்னொரு படம் சரியா ஓடலைன்னா வெளியே வராம இருக்குற துன்னு நான் எப்பவுமே இருந்ததே கிடை யாது.
ரெண்டையும் ஒரே மாதிரிதான் பார்ப் பேன். என்னோட படங்கள் சரியா போகாத போதும் வெளியே வந்து, போய்ட்டுத்தான் இருந்தேன். நாமதான் ஸ்கூல்லயே ஃபெயில் எல்லாம் பார்த்தாச்சே. அதே மாதிரி தொடர்ந்து வெற்றி அடைஞ்சிட்டே இருப் பதைவிட திரும்பத் திரும்ப அடிவாங்கி… தோற்றுத் தோற்றுப் போய்… எழுந்து ஜெயிக் கிறதுதான் பெரிய விஷயம்னு நினைக் கிறேன். அதில் கிடைக்கிற சந்தோஷமே தனிதான்!
ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்தது இது. ஹீரோவா தொடர்ந்து நடிச்சிட்டிருந்த நேரத்துல படம் டைரக்ட் பண்ணணும்கிற ஆசை எனக்கு வந்துச்சு. ஒரு ஹீரோகிட்ட கதை சொல்ல டைம் கேட்டு அவரைப் பார்க் கப் போனேன். வீட்டுக்குப் போய் பெல் அடிச் சதும் வேறு ஒருத்தர் வந்து பார்த்துட்டு, எதுவும் சொல்லாம போய்ட்டார். பெருசா ரெஸ்பான்ஸ் இல்லை. அஞ்சு நிமிஷம் வரைக் கும் கதவும் திறக்கலை. இவ்வளவுக்கும் நான் அவரைவிட நல்ல பொசிஷன்ல இருக் கிற ஹீரோ. ஒரு புது அசிஸ்டெண்ட் டைரக் டர் கதை சொல்லப் போனா எப்படி போவாரோ? அதே மாதிரிதான் நானும் அங்கே போயிருந்தேன். கொஞ்ச நேரத்துக் குப் பிறகு அந்த ஹீரோ வந்தார்.
‘‘வாங்க.. வாங்க’’ன்னு உள்ளே கூப்பிட்டு நல்லா உப சரிச்சார். நான் கதையை சொன்னேன். அதைக் கேட்டு அவரிடம் பெருசா எந்த ரியாக் ஷனும் இல்லை. அது, ஏன்னு இப்போ வரைக்கும் எனக்குத் தெரியலை. வெளியில நல்லா தெரி யிற ஹீரோவா இருந்தாலும் அது வேற, இது வேறங்கிற அனுபவம் கிடைச்சது. கதை சொல் லப்போறப்பவும் ஒரு லெவலோடத்தான் போகணும்னு அப்போ தோணுச்சு. இதெல் லாம் தாண்டி வந்துதான் பின்னாடி தமிழ், தெலுங்கு, ஹிந்தின்னு படம் டைரக்ட் பண்ணினேன். சின்ன ஆளா இருக்கும்போது அவமானப்படுறதைவிட பெரிய ஆளா ஆகி அதை அனுபவிக்கிறப்போ இன்னும் கஷ்டம் அதிகம். கிழே இருந்து விழுவதைவிட மேலே போய் கீழே விழும்போது தானே வலி அதிகமா இருக்கு. அந்த டைம்ல இந்த மாதிரி அனுபவமும் எனக்கு இருந்துச்சு.
என் வாழ்க்கையில எல்லாமே வேகமாத் தான் நடந்துட்டிருக்கு. டான்ஸ், ஹீரோ, புகழ், திருமணம், டைவர்ஸ், இழப்புன்னு எல்லாத்து லேயும் வேகம்தான். தெரிஞ்சோ, தெரியா மலோ என்னை ‘நடனப் புயல்’னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அதுதான் எல்லாமே புயலா மாறி வேகமா அடிச்சிட்டிருக்குன்னு நினைக்கிறேன்.
ஒரு படத்தோட ஷூட்டிங். பேரு வேண் டாம்னு நினைக்கிறேன். அந்தப் படத்தோட டைரக்டர் வந்தார். ‘‘என்ன பிரபு, அந்த ஹீரோ யின் உங்களை ரொம்ப விசாரிக்கிறாங்க’’ன் னார். ‘‘ஏன் சார் என்னை வெச்சி படம் எடுக்கப் போறாங்களா?’’ன்னு கேட்டேன். அதுக்கு அவர், ‘‘நீங்க நல்லவரா? அப்படி இப்படின்னு ஆர்வமா கேட்குறாங்க’’ன்னார். எனக்கு ஒண் ணும் புரியாம, ‘‘எதுக்குன்னு தெரிய லையே’’ன்னு திரும்பச் சொன்னேன்.
அந்த டைரக்டர், ‘‘ என்னப்பா.. எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கிறியே?’’ன்னு சொல்லிட்டு, ‘‘அவங்க உன் மேல ரொம்ப இன்ட்ரெஸ்டா இருக்காங்க!’’ன்னு சொன்னார். அவர் அப்படி சொன்ன அடுத்த வாரமே எனக்குக் கல்யாணம் ஆச்சு. அந்த ஹீரோயினும் அதை எதிர்பார்த்திருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அதுதான் லைஃப்!
என்னோட கல்யாணம் எப்படி நடந்த துன்னு உங்கள்ல பலருக்கும் தெரியும். ஏன்னா, அந்த நேரத்துல நடந்த என்னோட காதல் திருமணம் மிகப்பெரிய சென் சேஷனல் விஷயமா இருந்துச்சே. காதல் கிறது எப்படின்னு நெருக்கமான ஃபிரெண்ட்ஸ் சிலர் என்கிட்ட கேட்பாங்க. நான் காதலோட எக்ஸ்ட்ரீம் லெவல் வரைக் கும் போனவன். அதுவே ஸ்கூல்ல படிக் குறப்ப பொண்ணுங்களிடம் பேசினதுகூட இல்லை. அந்த டைம்ல காதல் பண்றவங்க சண்டை போட்டுக்கிறதை பார்க்கும்போது ‘இவங்களுக்கு வேற வேலையே இல்லையா? கிரிக்கெட், ஃபுட்பால் விளை யாட்டுன்னு எவ்ளோ ஜாலியான விஷயம் இருக்கு’ன்னு நினைச்சிப்பேன். அதேபோல சண்டை, காமெடி படங்களைப் பிடிக்கிற அளவுக்கு காதல் படங்களைப் பார்க்கும் போது பெருசா எனக்கு ஈர்ப்பே இருக்காது. அப்படி ஒரு மனநிலையில இருந்த நானும் ஒரு கட்டத்துல காதலில் விழுந்தேன். என்னைக் கேட்டா காதல் நல்ல விஷயம்னு சொல்லலாம். அதுவே ஆபத்தான விஷயம்னும் சொல்லலாம்.
மழை, வெய்யில், தென்றல்னு கலந்தது தான் என்னோட திருமண வாழ்க்கை. அதை எல்லாத்தையும் இங்கே நான் சொல்லப் போறதில்லை. மேடை நாகரிகம், பத்திரிகை தர்மம்னு சொல்ற மாதிரி எதையெல்லாம் சொல்ல முடியுமோ அதை மட்டும் பகிர்ந்துக்க போறேன். இதுல மத்தவங்க யாரையும் பாதிக்காத அளவுக்கு சொல்லியாகணும். அதுதான் சரின்னு தோணுது.
சாதாரணமா யாரா இருந்தாலும் முதல்ல என்கிட்ட எதிர்பார்க்குறது என்னோட காதல் விஷயத்தைதான். அப்படி கேட்கும்போது நான் சிரிச்சுக்கத்தான் செய்வேன். இந்த விஷயம்தான் அவங்களுக்கு ஜாலியா இருக்கும் போலிருக்குன்னு நினைச் சிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல என்னோட வேலையைத் தவிர சுத்தி நடக்கிறதை பெருசா நான் கவனிக்கிறதே இல்லை. அதே மாதிரி சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் பத்திரிகையில வர்ற கிசுகிசுன்னு விஷயங்களை ஆர்வமா படிக் கிற பழக்கமும் இல்லை. நாம பார்க்க வேண்டியது முகமில்லாத திறமையும், சிபாரிசு இல்லாத உழைப்பும்தான்னு ஓடிட்டிருக்குற ஆள் நான். அப்படி இருக்கும்போது ஜனங்க மட்டும் ஏன் செலிப்ரட்டியோட பர்சனல் விஷயத்தை தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்காங்கன்னு, பலமுறை நினைச்சிருக்கேன். அப்புறம்தான் தெரிஞ்சுது, ஒவ்வொரு செலிப்ரட்டியோட பர்சனல் வாழ்க்கையையும் மக்கள் ஃபாலோ பண்றாங்கன்னு.
ஒரு விஷயத்தைத் தொடும்போது, ‘அதை இப்படி செய்யாம இருந்திருக்கலாமே’ன்னு சிலர் சொல்வாங்க. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எதெல்லாம் நாம பார்க் கணும்னு இருக்கோ, அதை எதிர்கொண்டு தான் ஆகணும். ‘அந்த வழியில போனது னாலதான் உனக்கு முள் குத்திடுச்சு. அதுக்கு எதிர் திசையில போயிருக்கலாமே!’ன்னு சொல்வாங்க. ஆனா, அந்த வழியிலயும் ஏதாவது ஒரு ஆபத்து இருக்கத்தான் செய்யும். எந்த கஷ்டமும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு காமெடியான விஷயமா மாறிடுது. அதே போல ஒவ்வொரு ஜாலியான நிகழ்வுகளும் கொஞ்ச வருஷத்துக்குப் பிறகு கண்ணீர் வரவழைக்கிற அளவுக்கு நெகிழ்வும், கொஞ்சம் சோகத்தையும் கொடுத்துட்டு போய்டுது. அதுதான் வாழ்க்கை! அந்த மாதிரி இரண்டும் கலந்து என்னோட லைஃப்ல நடந்த சில விஷயங்களை உங்கக்கிட்ட பகிர்ந்துக்கப் போறேன். தொடர்ந்து அடுத்தடுத்து நான் நடிச்ச, டைரக்ட் செஞ்ச படங்களைப் பற்றி மட்டுமே பேசாம, இதையும் கலந்து எழுதறப்போ… எனக்கே அது புது அனுபவமா இருக்கும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago