இயக்குநராகும் ஆசை இருக்கு! - ஆண்டனி சிறப்புப் பேட்டி

By கா.இசக்கி முத்து

ஒரு படத்தை நாம் எளிதாக பார்த்து விடுகிறோம். ஆனால், நாம் பார்க்கும் படத்தை ஒரு எடிட்டர் சில மாத காலம் உட்கார்ந்து செதுக்கிய பின்பே நாம் பார்க்கிறோம் அந்த அளவுக்கு படத்திற்கு ஒரு எடிட்டர் அதிமுக்கியமானவர். தமிழ் திரையுலகில் தற்போது உள்ள மிகச்சிறந்த எடிட்டர்களில் ஒருவர் ஆண்டனி.

'இங்க என்ன சொல்லுது' படத்தின் எடிட்டிங்கில் இருந்தவரிடம் கேள்விகளைக் கேட்டால், கட் செய்ய வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு டக் டக் என்று வந்து விழுகின்றன பதில்கள்.

ஆண்டனி எடிட்டர் ஆண்டனி ஆனது எப்படி? அப்படியே கட் பண்ணி, ஒரு ப்ளாஷ்பேக் போங்க...

“கல்லூரிப் படிப்பை முடிச்சுட்டு, நண்பர்கள்கிட்ட அடுத்து என்ன பண்றதுன்னு கேட்டேன். எனக்கு வரையறது ரொம்ப பிடிக்கும். காலேஜ் படிக்குறப்போ கம்ப்யூட்டர் பிடிக்க ஆரம்பிச்சது. ரெண்டையும் கலந்தா அனிமேஷன். அதனால அதைக் கத்துக்க சொல்லி நண்பர்கள் யோசனை சொன்னாங்க.

காலைல கொரியர் டெலிவர் பண்ற வேலைக்குப் போய் மாலையில அனிமேஷன் படிச்சேன். திடீர்னு நண்பர் ஒருத்தர், எடிட்டிங் படிக்க யோசனை சொன்னார். 2 நாள் போய் பார்த்தேன். பிறகு இதுதான் நம்ம வாழ்க்கைன்னு முடிவு பண்ணினேன். நிறைய விளம்பரங்கள், டாக்குமென்டரி, மியூசிக் வீடியோஸ்னு பண்ணுவேன். வேலையே இல்லன்னா கூட நைட் ஃபுல்லா உட்காந்து எதையாவது எடுத்து எடிட் பண்ணிட்டு இருப்பேன்.

ஒரு நாள் ஏ.வி.எம்ல இருந்து அழைப்பு வந்தது. அங்கிருந்து ராஜிவ் மேனன் ஆபிஸ் போனேன். அங்க நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. ஒரு நாள் கெளதம் சார் வந்து, நாளைக்கு 'காக்க காக்க' ஆடியோ ரிலீஸ் இருக்கு. இந்த பாட்டை மட்டும் எடிட் பண்ணிக்கொடுனு கேட்டார். 'என்னைக் கொஞ்சம் மாற்றி' பாட்டை ராத்திரி முழுக்க உட்காந்து எடிட் பண்ணி காலைல காட்டினேன். ரொம்ப நல்லாயிருக்கு. இந்த படத்தையும் நீயே எடிட் பண்றியானு உடனே கேட்டார். சரி பண்ணலாமேனு ஒத்துக்கிட்டேன். அப்படித்தான் எடிட்டிங்ல காலடி வச்சேன்.”

'காக்க காக்க' படத்தின் எடிட்டிங் மூலம் ஸ்பீடு எடிட்டிங்னு ஒரு டிரெண்ட் செட் ஆயிடுச்சு.. இப்ப எல்லாரும் அதைச் செய்யறாங்களே?

“அப்பவே சொன்னாங்க.. டிரெண்ட் செட் பண்ணிட்டேன், இது தான் ஆண்டனி கட்டிங்னு. இந்த சீனை இப்படி எடிட் பண்ணி, அதன் மூலமா ஒரு டிரெண்ட்டை செட் பண்ணி விட்டுறலாம் அப்படினு நான் நினைச்சதே கிடையாது. ஆனா இப்ப பாதி பேர் வேணும்னே பண்றாங்க. சில பேர் தேவையான இடத்துல பண்றாங்க.”

ஷங்கர் படங்கள்ல பணியாற்றிய அனுபவம் எப்படியிருக்கு? இப்ப 'ஐ' காட்சிகள் எல்லாம் பாத்துருப்பீங்களே?

“ஷங்கர் சாரை பாக்குறதுக்கு பயமா இருக்கும். ஆனா பக்கத்துல போயிட்டா குழந்தைமாதிரி. எதையும் ப்ளான் பண்ணி பக்காவா பண்ணுவார் 'ஐ' படம் சூப்பரா இருக்கு, பிரமாதமா வந்திருக்கு.”

படத்துல சீன்களை விட பாட்டுக்கு ரொம்ப மெனக்கிடுறீங்களே என்ன காரணம்?

“எனக்கு சின்ன வயசுல இருந்தே மியூசிக்னா ரொம்ப பிடிக்கும். ஒரு சண்டைக்காட்சி எடிட் பண்ணிட்டு இருந்தா கூட, பக்கத்துல வேற ஏதாவது ஒரு பாட்டு கேட்டுட்டு இருப்பேன். அதான் பாடல் காட்சிகள்ல மெனக்கிடுறதுக்கு காரணம்.”

“கருத்து வேறுபாடு வந்தாத்தான் எடிட்டிங் ஹிட்டுன்னு அர்த்தம். இயக்குநர்களை பக்கத்துல உட்காரவைச்சு, அவங்க சொல்லச் சொல்ல நான் எடிட் பண்ணினா, நான் வெறும் ஆப்பரேட்டர் ஆயிடுவேன். நானும் இயக்குநரும் நிறைய பேசிப்போம். ஒரு கட்டத்துல ரெண்டுபேர்ல ஒருத்தருக்கு தெரிஞ்சிரும், இவரு சொல்றது க்ரெக்ட் தான்னு. கடைசில யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்து போயிடுவோம். இந்த மாதிரி நடந்தா தான் ஒரு படத்தை அழகா உருவாக்க முடியும்.”

தொடர்ச்சியா சிம்பு படங்கள் எடிட் பண்ணிட்டு இருந்தீங்க. இப்போ பண்றதில்லையே?

“அப்படியெல்லாம் ஒண்ணு மில்லையே. அது டைரக்டரைப் பொருத்தது. சிம்பு ஒரு நடிகர், என்னோட நண்பர்னுகூட வச்சுக்கலாம். சில இயக்குநர்கள் என்னை வைச்சு எடிட் பண்ணலாம்னு நினைப்பாங்க. சில பேர் வேற எடிட்டரை வைச்சு எடிட் பண்ணலாம்னு நினைப்பாங்க. அவ்வளவுதான்.”

பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் எல்லாம் எடிட்டரா இருந்தவங்க தான். எடிட்டர் ஆண்டனியை எப்போ இயக்குநர் ஆண்டனியா பாக்குறது..?

“அப்படி ஒரு குறிக்கோள் எல்லாம் கிடையாது. வந்தா பண்ணுவேன். இயக்குனராகும் ஆசையிருக்கு. பாக்கலாம். அதுக்காக, நாளைக்கே இயக்குநரா ஆயிடணும் அப்படினு ஆசை எல்லாம் கிடையாது.”

சமீபத்துல வந்த தமிழ் படத்துல எந்த படத்தோட எடிட்டிங் உங்களுக்கு பிடிச்சிருந்தது?

“நான் என்னோட படங்களையே ஒரு எடிட்டரா பாக்குறதில்லை. தியேட்டருக்கு போனோமா, பாப்கார்ன் வாங்கினோமா, உள்ள போய் படத்த பாத்தோமா. விசில் அடிச்சோமா, என்ஜாய் பண்ணோமா.. அவ்வளவு தான். கேமரா ஒர்க் நல்லாயிருக்கு, எடிட்டிங் நல்லாயிருக்கு அப்படிங்கிற கோணத்துல நான் படங்கள் பாக்குறதில்லை.”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

மேலும்