வணக்கம் சென்னை - முன்னோட்டம்

By செய்திப்பிரிவு

'மிர்ச்சி' சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடிக்க கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் 'வணக்கம் சென்னை'. அனிருத் இசையமைக்க, ரிச்சார்ட் எம். நந்தன் ஒளிப்பதிவு செய்ய, உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.

வாய்ப்புகள் தேடி வரும் நகரம் சென்னை. தேனி மாவட்டத்தில் இருந்து வரும் நாயகனும், லண்டனில் இருந்து வரும் நாயகிக்கும் வரும் காதல், மோதல், காமெடிதான் 'வணக்கம் சென்னை'. இக்கதையில் சந்தானத்தை வைத்து காமெடி கதகளி ஆடியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. ஏனென்றால், இப்படத்தின் கதையினை துவக்கி வைப்பதும், முடித்து வைப்பதும் சந்தானம்தான்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், படப்பிடிப்பு தொடங்கி நீண்ட நாட்களுகு பிறகே இப்படத்தின் FIRST LOOK TEASER, POSTER ஆகியவற்றை வெளியிட்டார்கள். படத்தின் டீஸரில் இடம்பெற்ற 'எங்கடி பொறந்த' பாடல் வெளியான அன்றே இளைஞர்களிடையே வரவேற்பு பெற்றது.

'வணக்கம் சென்னை' படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸாக அமைந்தது அனிருத் பாடல்கள்தான். பாடல்கள் அனைத்துமே இளைஞர்களை கவரும் விதத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இப்படத்தின் பாடல்கள் வெளியான அன்று தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு APPLE iTunes பிரிவில் முதல் இடத்தினை பிடித்தது.

தமிழ் திரையுலகில் தற்போது இருக்கும் காமெடி ட்ரெண்ட், மிர்ச்சி சிவா, முக்கியமாக சந்தானம் காமெடி, அனிருத் பாடல்கள் நம்பி இப்படம் களமிறங்குகிறது. தனது மனைவி இயக்கும் முதல் படம் என்பதால், விளம்பரங்களுக்கு தாராளமாக செலவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிந்து 'வணக்கம் சென்னை' மக்களின் பார்வைக்கு அக்டோபர் 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. நவராத்திரி விடுமுறைகளைக் கணக்கில் கொண்டு கல்லா கட்ட தீர்மானித்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்