மும்பை திரைப்படவிழாவில் ராஜா ராணி

By ஸ்கிரீனன்

15வது மும்பை திரைப்பட விழாவில் 'ராஜா ராணி' திரையிடப்பட இருக்கிறது.

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடிக்க, அட்லீ இயக்கிய காதல் காக்டெய்ல் 'ராஜா ராணி'. ஏ.ஆர்.முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், தி நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் நிறுவனம் என மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்தார்கள்.

மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாட்களைக் கடந்தும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

25 நாட்களில் 50 கோடி வசூலைத் தாண்டியிருக்கும் 'ராஜா ராணி' திரைப்படத்தை மும்பை திரைப்பட விழாவில் திரையிட இருக்கிறார்கள். இப்படத்தை நாளை (அக். 24) மும்பை சினிமேஸ் திரையரங்கில் இரவு 8:30 மணிக்கு திரையிடுகிறார்கள். தமிழ் திரையுலகில் 2013 வருடத்தில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களில் மூன்றாம் இடத்தினை பிடித்திருக்கிறது இப்படம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் என படத்திற்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிவதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்