சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘விதி’ சீரியல் வழியே கதாசிரியராக அவதாரம் எடுத்திருக்கிறார், சின்னத்திரை நடிகை அப்சரா. அவருடன் ஒரு சந்திப்பு..
என்ன மாதிரியான கதை இது?
நம்மைச் சுற்றி இருக்கும் குடும்ப நிகழ்வுகளைப் பின்னணியாக வைத்துதான் இந்தக் கதையை எழுதியுள்ளேன். காதலிக்கும் போது விழுந்து விழுந்து அன்பைப் பரிமாறிக் கொள்பவர்கள், திருமணத்துக்குப் பிறகு வேலைச் சூழல், பணத் தேவை என்று 10 நிமிடம் கூட நின்று அன்போடு பேசிக்கொள்ள முடியாத ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண் டிருக்கிறார்கள். இந்த மாதிரியான சூழலில் குடும்பத்தில் எப்படி பிரச்சினைகள் உருவாகி றது? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற முயற்சியைத்தான் இந்த ‘விதி’ சீரியலில் சொல்லப்போகிறோம். இந்தக் கதையை லிடியா பால் என்ற என் நிஜப் பெயரில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு நான் எழுதிய கதையின் ப்ளாஷ்பேக் பகுதிகள்தான் ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் மெயின் கதை வரும்.
இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வரும் சீரியல்கள் எல்லாம் சினிமா தரத்துக்கு எடுக்கிறார்கள். நம்ம ஊரில் சீரியல்கள் இன்னும் மாறவே இல்லையே?
உண்மைதான்! நம்ம ஊரில் இன்னும் பழைய வழக்கத்தில்தான் பல கதைகள் வந்து கொண்டிருக்கின்றன. சீரியல்களுக்கும் சமூக அக்கறை அதிகம் உண்டு. இன்னமும் கர்ப்பிணி பெண்ணை கொடுமைப்படுத்துவது, விஷம் கொடுத்து கொலை செய்வது, குழந்தையைக் கடத்துவது, மாமியார் கொடுமை என்றே யோசிக்கிறோம். மக்களுக்கு இதைத்தான் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிற இடத்தில் நாம் இருக்கிறோம் என்கிற நினைப்பு சீரியல் எடுப்பவர்களுக்கு வேண்டும். அது அவ்வளவு பொறுப்பான வேலை!
நான் எழுதும் ‘விதி’ தொடரில் முடிந்த வரை பொழுதுபோக்கான அம்சங்களோடு சமூக அக்கறையையும் கலந்துதான் கொடுத்து வருகிறேன். ஆனால், என் கதை கூட சீரியலாக முழுமை பெறும்போது கமர்ஷியலுக்காக அதில் சில மாற்றங்களுடன்தான் வெளிவரு கிறது. இப்படி நிறையப் பிரச்சினைகள் இங்கே இருக்கிறது. அதெல்லாம் மாறினால் நம்ம ஊரிலும் நல்ல சீரியல்கள் வரும்.
அடுத்து சினிமாவுக்கான திரைக்கதைதானா?
அதைப்பற்றியெல்லாம் இப்போது யோசிக்கவில்லை. எப்பவும் எனது தேர்வு சீரியல்களாகத்தான் இருக்கும். குடும்பம், அது சார்ந்த வாழ்க்கையை சீரியல்கள் வழியே சொல்வது போல சினிமாவில் கொடுக்க முடியுமா என்கிற யோசனையும் இருக்கிறது. குறிப்பாக 2 மணி நேரத்தில் என்னால் எல்லாவற்றையும் சொல்ல முடி யுமா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. அத னால் அடுத்தடுத்த கதைகளையும் சீரியலாக எடுக்கும் வகையிலேயே எழுதுகிறேன்.
‘மரகத வீணை’ சீரியலில் வில்லி அவதாரம் எடுத்திருக்கிறீர்களே?
முதன் முறையாக வில்லியாக நடிக்கிறேன். வித்தியாசமாக இருக்கிறது. ஆனால், பாசமான வளாக, நல்லவளாக நடிக்கும் கதாபாத்திரங் களில் இருக்கும் ஜீவன் அதில் பெரிதாக இல்லை. அதனாலேயே அதிகம் நல்ல பெண் ணாக வரும் கதாபாத்திரம்தான் பிடிக்கிறது.
அடுத்தடுத்த கதைகள் தயாரா?
நடிப்புக்கு இடையே ’தி ஈவா வெட்டிங் கவுண் டிசைனிங்’ என்ற பெயரில் பிசினஸும் போய்க்கிட்டிருக்கு. சின்னத் திரைக்குள்ளே வந்து மூன் றரை வருஷம் ஆயிடுச்சு. மலையாள பூமியில் இருந்து வந்து இப்போ நல்லா தமிழ் பேசக் கற்றுக்கொண்டேன். நிறைய கதைகள் இருக்கிறது. இப்போது எழுதுகிற கதைகளை மலையாளத்தில் எழுதியும், தமிழில் பேசியும்தான் கொடுக் கிறேன். தமிழ் நன்றாக படிக்க, எழுத வேண்டும் என்ற ஆர் வத்தையும் இப்போ கதை எழுதுற இந்தச் சூழல் உருவாக்கியிருக்கு.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago